• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • எஸ்பிஐ MCLR வட்டி விகிதம் 0.05 சதவீதம் குறைப்பு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

எஸ்பிஐ MCLR வட்டி விகிதம் 0.05 சதவீதம் குறைப்பு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

எஸ்பிஐ ஏப்ரல் மாதம் 10-ம் தேதி MCLR வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் MCLR எனப்படும் கடன் அடிப்படை வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்து அறிவித்துள்ளது.

    பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ ஏப்ரல் மாதம் 10-ம் தேதி MCLR வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்தது. தற்போது மீண்டும் மே 9-ம் தேதி முதல் MCLR வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் எஸ்பிஐ குறைத்துள்ளது.

    எனவே எஸ்பிஐ வங்கியின் MCLR அடிப்படை வட்டி விகிதம் 8.50 சதவீதத்திலிருந்து 8.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.

    MCLR அடிப்படை வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் மே 10-ம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன், வாகனக் கடன் மீதான மாத தவணை குறையும்.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: