வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்தது எஸ்பிஐ!

Web Desk | news18
Updated: July 10, 2019, 8:34 AM IST
வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்தது எஸ்பிஐ!
முன்னதாக எஸ்பிஐ கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்தது. இப்போது பாங்க் ஆஃப் பரோடா குறைத்துள்ளது. விரைவில் பிற வங்கிகளும் வட்டி விகிதம் குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புகள் உள்ளது.
Web Desk | news18
Updated: July 10, 2019, 8:34 AM IST
இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ, MCLR (Marginal Cost of fund based lending rate) வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்து 8.40 சதவீதமாக அறிவித்துள்ளது.

எஸ்பிஐ-ன் இந்த வட்டி விகித குறைப்பால் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்கள் குறையும்.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தற்போது வரை மட்டும், எஸ்பிஐ வங்கி மூன்று முறை கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.


எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடன் திட்டம் மீதான வட்டி விகிதத்தை ஆபிஐ-ன் ரெப்போ வட்டி விகிதத்துடன் 2019 ஜூலை 1-ம் தேதி முதல் இணைத்துள்ளது. எனவே வரும் காலங்களில் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதங்களை மாற்றி அமைக்கும்போது அதன் தாக்கம் நேரடியாக எஸ்பிஐ கடன் திட்டங்களிலும் இருக்கும்.

தற்போது குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமாக எஸ்பிஐ உள்ளது. 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் திட்டம் மீதான வட்டி விகிதத்தை எஸ்பிஐ 8.60 சதவீதத்திலிருந்து 8.55 சதவீதமாகக் குறைத்துள்ளது.

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் திட்டம் மீதான வட்டி விகிதம் குறைந்தபட்சம் 8.55 சதவீதமாகவும், அதிகபட்சம் 9.45 சதவீதமாகவும் உள்ளது.

Loading...

இந்த புதிய வட்டி விகித குறைப்பு 2019 ஜூலை 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க:
First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...