SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... தடையின்றி சேவைகளை பெற ஜூன் இறுதிக்குள் இதை செய்வது கட்டாயம்!

SBI

ஜூன் 30-க்குள் வடிக்கையாளர்கள் இந்த அப்டேட்டை செய்து முடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வங்கி அறிவித்துள்ளது

  • Share this:
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. SBI வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் பான் கார்டை ஆதாருடன் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என்று அதில் வங்கி அறிவுறுத்தி உள்ளது. அதாவது ஜூன் 30-க்குள் வடிக்கையாளர்கள் இந்த அப்டேட்டை செய்து முடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வங்கி அறிவித்துள்ளது. அப்படி செய்யவில்லையெனில் வாடிக்கையாளர்கள் தற்போது பெற்று வரும் சேவைகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் வங்கி எச்சரித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இது தொடர்பான தகவலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான TheOfficialSBI மூலம் ஷேர் செய்துள்ளது. வங்கி சேவையில் எந்த ஒரு சிரமம் ஏற்படாமல் தவிர்க்கவும், தடையற்ற வங்கி சேவைகளை தொடர்ந்து அனுபவிக்கவும் வாடிக்கையாளர்கள் தங்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு இதன் மூலம் வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். SBI வங்கியின் இந்த அறிவிப்பு ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்பதை தெரிவிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிரந்தர கணக்கு எண் (PAN-Permanent Account Number) என்பது வருமான வரித் துறையால் வழங்கப்படும் பத்து டிஜிட் அடங்கிய தனித்துவமான எழுத்து மற்றும் எண் கொண்டது. இது அரசால் வழங்கப்படும் ஒரு முக்கியமான நிதி ஆவணமாகும். இது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதை தடுக்க வழங்கப்படுகிறது.

Also Read:   ‘அங்கிள் ஜி’ வேற வேலை தேடுங்க: மேற்குவங்க ஆளுநரை சாடிய பெண் எம்.பி மஹுவா மொய்த்ரா!

ஏனென்றால் பான் எண் ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்தால் செய்யப்படும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் இணைக்கிறது. பான் கார்டு மூலம், வரி நோக்கங்களுக்காக அனைத்து முக்கிய பரிவர்த்தனைகளின் விரிவான ரெகார்டை வருமான வரித்துறை பெறுகிறது. எனவே மக்கள் அனைவரும் தங்களது பான் மற்றும் ஆதாரை ஒன்றுடன் ஒன்று இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது கட்டாயம் என்றும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் தொற்று பரவலை கருத்தில் கொண்டு மத்திய அரசு மார்ச் 31 என்றிருந்த காலக்கெடுவை ஜூன் 30 வரை நீடித்துள்ளது. இந்த தேதிக்குள் இணைக்காவிட்டால் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.

Also Read :  கத்தி முனையில் 6 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவி!

இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை தற்போது எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தங்களது வாடிக்கையாளர்கள் தங்கள் பான் கார்டை ஆதாருடன் இந்த மாத இறுதிக்குள் இணைக்க தவறினால், அவர்களது பான் அது செயல்படாத அல்லது செயலற்றதாக (inoperative or inactive) இருக்கும் என்றும், குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை செய்வதில் இதனால் பாதிப்புகள் ஏற்படும் என்றும் வங்கி கூறி உள்ளது. மேலும் www.incometaxindiaefilling.gov.in என்ற வெப்சைட் லிங்கையும் அதிகாரிகள் ஷேர் செய்துள்ளனர்.

இந்த லிங்க் மூலம் எளிதான வழிமுறைகளைப் பின்பற்றி ஆவணங்களை இணைக்க முடியும். லிங்க்கை கிளிக் செய்த பிறகு, கணக்கு வைத்திருப்பவர்கள் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்து விவரங்களை நிரப்ப வேண்டும்.
Published by:Arun
First published: