SBI Customers : மிஸ்டு கால், SMS மூலம் SBI அக்கவுண்ட் பேலன்ஸ் செக் செய்வது எப்படி.?

SBI

அக்கவுண்ட் நம்பர் மற்றும் அக்கவுண்ட் டைப்புடன் பேலன்ஸ் தகவல்களைக் கொண்ட ஒரு SMS மூலம் உங்கள் வெவ்வேறு அக்கவுண்ட்களை பற்றிய விவரங்களை SBI வங்கி அனுப்பும்.

  • Share this:
    இன்டர்நெட் மூலம் இப்போது பெரும்பாலான வங்கி சேவைகளை கைவிரல் நுனிகளிலேயே இப்போது பெற முடிகிறது. இப்போது நீங்கள் நெட் பேங்கிங் பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்கில் லாகின் செய்து அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கான பேலன்ஸ் செக்கிங், பிறரது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புவது, தகவல் புதுப்பிப்பு போன்ற பல்வேறு செயல்களை செய்ய முடியும் என்பது பொதுவாக எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயமாகும்.

    ஒருவேளை நீங்கள் நெட்ஒர்க் கவரேஜ் கிடைக்காத அல்லது சரி இல்லாத இடத்தில் இருக்கும் போது உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் பேலன்ஸ் செக் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது?

    நெட்ஒர்க் கவரேஜ் சரியில்லாத பகுதியில் சிக்கி இருக்கும் போது கூட உங்களால் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை செக் செய்ய முடியும், அதற்கு நீங்கள் ஒரு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளராக இருக்க வேண்டும். நீங்கள் SBI வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவராக இருந்தால், மிஸ்டு கால் கொடுத்து அல்லது உங்கள் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து SMS அனுப்புவதன் மூலம் உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸை சரி பார்த்து கொள்ளலாம்.

    ALSO READ |  ரூ.5 லட்சம் முதலீடு, மாத வருமானம் ரூ.10,000 ; SBI-ன் சூப்பர் பிளான்

    இருப்பினும் நீங்கள் முதலில் SBI வழங்கும் இந்த சேவைகளைபெற ஒரு எளிய செயல்முறை மூலம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். SBI அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வங்கியில் பதிவு செய்த தங்கள் மொபைல் நம்பரில் இருந்து 09223488888 என்ற எண்ணுக்கு "REG Account Number"என்று டைப் செய்து SMS அனுப்ப வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வாடிக்கையாளர் இந்த கோரிக்கையை அனுப்பிய பின்னர், அதற்கு வெற்றிகரமாக ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருந்தால் successful எனவும், ரிஜிஸ்டர் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டால் unsuccessful எனவும் வங்கியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் வரும். SBI வழங்கும் இந்த சேவையின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், ஒரே மொபைல் எண்ணை கொண்ட பல வங்கிக் கணக்கு உள்ள யூஸர்களும் இந்த சேவைகளை பெற ஒரே நேரத்தில் ரிஜிஸ்டர் செய்யலாம்.

    ALSO READ |  இந்திய தபால் துறையின் மாதாந்திர வருமான திட்டம் - அறிய வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்

    இதன் மூலம் அக்கவுண்ட் நம்பர் மற்றும் அக்கவுண்ட் டைப்புடன் பேலன்ஸ் தகவல்களைக் கொண்ட ஒரு SMS மூலம் உங்கள் வெவ்வேறு அக்கவுண்ட்களை பற்றிய விவரங்களை SBI வங்கி அனுப்பும்.

    தங்களது வாடிக்கையாளர்களுக்கு SBI வழங்கும் இந்த வசதியானது மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் பல்வேறு வங்கி நடவடிக்கைகளை செய்ய வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது. வாடிக்கையாளர் SBI வங்கியில் ரிஜிஸ்டர் செய்துள்ள மொபைல் நம்பரிலிருந்து 9223766666 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

    ALSO READ |  ஜூலை மாதத்தில் வங்கி பொது விடுமுறை நாட்கள் - முழு விவரம்!

    மினி-ஸ்டேட்மென்ட், ஈ ஸ்டேட்மென்ட் (ஆறு மாதங்கள்), வீட்டுக் கடன் சான்றிதழ் அறிக்கை, கல்வி கடன் சான்றிதழ் அறிக்கை, ஏடிஎம் கான்ஃபிகரேஷன், ஏடிஎம் பின், கார் மற்றும் வீட்டுக் கடன் விவரங்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல வங்கி நடவடிக்கைகளை செய்ய இந்த சேவையை பயன்படுத்தலாம்.

    SMS மூலம்..

    இந்த சேவையை பெற வங்கிக்கு SMS அனுப்பி வெற்றிகராக ரிஜிஸ்டர் செய்த பிறகு, SBI அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒருவர் பேலன்ஸை சரிபார்க்க BAL டைப் செய்து 09223766666 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு வங்கி தரப்பிலிருந்து அக்கவுண்ட் பேலன்ஸுடன் கூடிய SMS மொபைலுக்கு வரும். மினி-ஸ்டேட்மென்ட்டை பெற விரும்பினால் 09223866666 என்ற எண்ணிற்கு MSTMT என்று அனுப்ப வேண்டும். சேவிங் அக்கவுண்ட், கரன்ட் அக்கவுண்ட், ஓவர்டிராஃப்ட் அக்கவுண்ட், கேஷ் கிரெடிட் அக்கவுண்ட் உள்ளிட்டவற்றிற்கு இந்த SMS சேவையை பயன்படுத்த வங்கி அனுமதித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: