• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • அக்கவுண்ட் குறித்து பிரச்சனைக்கு இந்த நம்பருக்கு அழைத்தால் உடனே தீர்வு.. பிரபல வங்கி அறிவிப்பு!

அக்கவுண்ட் குறித்து பிரச்சனைக்கு இந்த நம்பருக்கு அழைத்தால் உடனே தீர்வு.. பிரபல வங்கி அறிவிப்பு!

எஸ்பிஐ

எஸ்பிஐ

புகார்களை தெரிவிக்க வேண்டுமென்றாலோ உடனே இந்த நம்பருக்கு அழைத்தால் தீர்வு கிடைக்கும்.

  • Share this:
    எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு, சேலரி கணக்கு என எந்த கணக்கு வைத்திருந்தாலும் அவர்களுக்கு இந்த பதிவு கட்டாயம் உதவும்.

    இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-யில் லட்சக்கணக்கான மக்கள் சேமிப்பு கணக்கு, பென்சன் கணக்கு மற்றும் சம்பள கணக்குகளை தொடர்கின்றனர். வாடிக்கையாளர்கள் சேவையில் பெரும் கவனம் செலுத்தும் எஸ்பிஐ சமீப காலமாக பல்வேறு வசதிகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அண்மையில் கூட பண்டிக்கைகால சலுகையாக ஹோம் லோனில் வட்டி விகிதத்தை குறைத்து அதற்கான செயலாக்க கட்டணத்தை முழுமையாக குறைத்துள்ளது.எஸ்பிஐக்கு இந்தியாவில் 22,000 கிளைகளும், 57,889 ஏடிஎம்களும் உள்ளது.கடந்த வருட கணக்கீட்டின் படி எஸ்பிஐ வங்கி 85 மில்லியன் இன்டர்நேட் பேங்கிங் மற்றும் 19 மில்லியன் மொபைல் பேங்கிங் பயனாளர்களையும் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லை எஸ்பிஐ யோனோ 34.5 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களை கொண்டுள்ளது.

    மக்களின் வசதிக்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் யோனோ மற்றும் யோனோ லைட் ஆப்கள் நடைமுறையில் உள்ளன.இவை அனைத்துவிதமான ஸ்மார்ட் போன் பயனாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனைகள், டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ஷாப்பிங், பணம் செலுத்துதல், ரீசார்ஜ் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வங்கி நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளனர். அதுக்குறித்து முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

    எஸ்.பி.ஐ வங்கி, போன் பேங்கிங் எண்ணை வெளியிட்டுள்ளது. எஸ்.பி.ஐ தற்போது அறிவித்துள்ளது டோல்ஃபிரீ எண் மூலம் வாடிக்கையாளர்கள் இலவசமாக உதவி மையத்தை அணுகி தங்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். டோல்ஃபிரீ எண் , இனி நீங்கள் எஸ்.பி.ஐயின் உதவி மையத்தை 1800 1234 என்ற இந்த எண்கள் மூலம் அணுக முடியும்.



    அதாவது உங்கள் அக்கவுண்ட் குறித்த ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும், புகார்களை தெரிவிக்க வேண்டுமென்றாலோ உடனே இந்த நம்பருக்கு அழைத்தால் தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது மிகவும் பயன் தரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: