முகப்பு /செய்தி /வணிகம் / SBI வாடிக்கையாளர்களே உஷார்; இந்த sms வந்தால் என்ன செய்யனும் தெரியுமா? 

SBI வாடிக்கையாளர்களே உஷார்; இந்த sms வந்தால் என்ன செய்யனும் தெரியுமா? 

SBI

SBI

SBI customer alert! வங்கி மற்றும் தனிப்பட்ட விவரங்களை பகிரும் படி எந்தவிதமான மெயில் அல்லது எஸ்எம்எஸ் வந்தாலும் அதற்கு பதிலளிக்கக்கூடாது.

  • Trending Desk
  • 2-MIN READ
  • Last Updated :
  • Mumbai | Chennai

இந்தியாவின் மிகப்பெரிய அரசுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ தனது வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்ட சேவைகளை அறிமுகப்படுத்துவதிலும், பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்துவதிலும் முதன்மையானதாக விளங்குகிறது. ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மாற்ற வங்கிகள் பலகட்ட பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிப்பதால், ஹேக்கர்களும் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆன்லைன் டெக்னாலஜி பற்றி அறிமுகமில்லாத நபர்களே இவர்களது முதல் டார்கெட்டாக உள்ளனர். வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் கணக்கு மூலம் நண்பர்கள் போல் பண உதவி கேட்டு மெசேஜ் அனுப்புவது, விஷிங் முறையில் போன் மூலமாக பேசி வாடிக்கையாளரின் வங்கி குறித்த தகவல்களைப் பெற முயல்வது, குறுஞ்செய்தி மூலமாக லிங்க் அனுப்பி அதனைப் பயன்படுத்தி தனிநபரின் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை திருட முயற்சிப்பது என பல வகையான மோசடிகள் குறித்து எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

தற்போது ஃபிஷிங் என்ற புதிய ஹேக்கிங் முறையைப் பயன்படுத்தி கணக்கு எண்கள், லாகின் ஐடிகள், உள்நுழைவு மற்றும் பரிவர்த்தனை பாஸ்வேட், மொபைல் எண்கள், முகவரிகள், டெபிட் கார்டு கட்ட மதிப்புகள், கிரெடிட் கார்டு எண்கள், CVV எண்கள், PAN, பிறந்த தேதிகள், தாயின் இயற்பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக எச்சரித்துள்ளது. மெயில், வாய்ஸ் மெசேஜ், எஸ்.எம்.எஸ். என மூன்று வகைகளில் ஃபிஷிங் நடைபெற்று வரும் நிலையில், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் மூலமாக ஏமாற்றப்படுவதாக வங்கி நிர்வாகம் அலர்ட் செய்துள்ளது.

கடந்த சில நாட்களாக பல எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு உங்களுடைய பான் எண்ணை வங்கி அக்கவுண்ட் உடன் இணைக்கவில்லை என்றால், கணக்கு முடக்கப்படும் என்ற செய்தி அனுப்பப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது ஹேக்கர் கும்பலால் பரப்பப்படும் பொய்யான குறுஞ்செய்தி என எச்சரித்துள்ள PIB Fact Check நிறுவனம், இதுபோன்ற எஸ்எம்எஸ்-கள் கிடைக்கப்பெற்றால், உடனடியாக புகார் தெரிவிக்கும் படியும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

ALSO READ | செப்டம்பர் 2022 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் - இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது.!

PIB Fact Check தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் வங்கி கணக்குடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்ற போலியான குறுஞ்செய்தி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவி வருகிறது” எனக்குறிப்பிட்டுள்ளது.

மோசடி கும்பலால் அனுப்பப்படும் போலி குறுஞ்செய்தியில் இடம் பெற்றுள்ள லிங்கை கிளிக் செய்தால், வங்கி கணக்கில் உள்ள பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி அல்லது மெயில் மூலமாக அனுப்பப்படும் லிங்கை கிளிக் செய்யும் போது, அது நேரடியாக செல்போன் அல்லது கணினியில் உள்ள வங்கி கணக்கை அணுக ஹேக்கர்களுக்கு உதவுகிறது.

போலி எஸ்எம்எஸ் வந்தால் செய்ய வேண்டியது என்ன?

வங்கி மற்றும் தனிப்பட்ட விவரங்களை பகிரும் படி எந்தவிதமான மெயில் அல்லது எஸ்எம்எஸ் வந்தாலும் அதற்கு பதிலளிக்கக்கூடாது. அப்படியொரு போலியான குறுச்செய்தி அல்லது மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றால் உடனடியாக report.phising@sbi.co.in என்ற எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ தளத்திலோ, 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ புகார் தெரிவிக்கலாம்.

2021-22 நிதியாண்டில், ஆன்லைன் மோசடியால மட்டும் வங்கி வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.179 கோடியை இழந்துள்ளனர். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2020-21 நிதியாண்டில் மட்டும் ஏடிஎம், டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மோசடிகள் மூலமாக 216 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Online Frauds, SBI, SBI Bank