எஸ்.பி.ஐ என்றழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்மிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டிலும் சேவைக் கட்டணத்திலும் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அந்த மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
- ஒருவருடைய வங்கிக் கணக்கில் மாத சராசரி இருப்புத் தொகை 25,000 ரூபாய்க்குள் இருந்தால் அந்த வாடிக்கையாளர் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்களில் 5 முறையும், இதர வங்கி ஏ.டி.எம்களிலிருந்து 8 முறையும் கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம்.
- ஒருவருடைய வங்கிக் கணக்கில் மாத சராசரி தொகை 25,000 ரூபாய்க்கு மேல் ஒரு லட்ச ரூபாய்க்குள் இருந்தால் அவர்கள் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்மில் அளவில்லாத முறை பணம் எடுக்கும் வாய்ப்பும், இதர வங்கி ஏ.டி.எம்களில் 8 முறையும் கட்டணமின்றி பணமெடுத்துக் கொள்ளலாம்.
- நடப்புக் கணக்கில் மாத சராசரி இருப்பு 1 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர்கள் அளவில்லாத முறை எஸ்.பி.ஐ மற்றும் இதர வங்கி ஏ.டி.எம்களில் பணமெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- வங்கி நிர்ணயித்த எண்ணிக்கையைத் தாண்டி எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் இருந்து நீங்கள் பணமெடுத்தால் ரூ.10 + ஜிஎஸ்டியும், இதர வங்கி ஏடிஎம்மில் நிர்ணயித்த எண்ணிக்கையைத் தாண்டி பணமெடுத்தால் ரூ.20 + ஜிஎஸ்டியும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து சேவைக் கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.
உங்கள் வங்கிக் கணக்கில் பணமில்லாமல் இருந்தால், பரிவர்த்தனை முடியும் போது அதற்காக ரூ.20+ஜிஎஸ்டி அபராதமாக வசூலிக்கப்படும்.
- ஒரு வேளை நீங்கள் எஸ்பிஐயில், சம்பளக் கணக்கை வைத்திருந்தால், உங்களுக்கு எஸ்பிஐ மற்றும் இதர வங்கி ஏடிஎம்களிலும் அளவில்லா பணப்பரிமாற்றம் செய்து கொள்ளும் சலுகை இன்று முதல் வழங்கப்படுகிறது.
அதேபோல, வங்கி குறைந்த இருப்பு வைத்திருப்பதிலிருந்து தவறும்போது விதிக்கப்படும் அபராதமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நகர்புறங்களில் எஸ்.பி.ஐயில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச இருப்பு ரூ.3,000-5,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்புத்தொகையில் 50 சதவிகிதம் குறைந்தால் ரூ.10+ஜி.எஸ்.டி அபராதம் விதிக்கப்படும்.
இருப்புத்தொகையில் 75 சதவிகிதம் வரை குறைந்தால் ரூ.12+ஜி.எஸ்.டி அபராதம் விதிக்கப்படும்.
இருப்புத்தொகையில் 75 சதவிகிதத்துக்கு மேல் குறைந்தால் ரூ.15+ஜி.எஸ்.டி அபராதமாக விதிக்கப்படும்.
அதேபோல, பெருநகரமல்லாத பகுதிகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச இருப்பு 2,000 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்புத்தொகையில் 50 சதவிகிதம் குறைந்தால் ரூ.7.5+ஜி.எஸ்.டி அபராதம் விதிக்கப்படும்.
இருப்புத்தொகையில் 75 சதவிகிதம் வரை குறைந்தால் ரூ.10+ஜி.எஸ்.டி அபராதம் விதிக்கப்படும்.
இருப்புத்தொகையில் 75 சதவிகிதத்துக்கு மேல் குறைந்தால் ரூ.12+ஜி.எஸ்.டி அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல, கிராமப் பகுதிகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச இருப்பு 1,000 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்புத்தொகையில் 50 சதவிகிதம் குறைந்தால் ரூ.5+ஜி.எஸ்.டி அபராதம் விதிக்கப்படும்.
இருப்புத்தொகையில் 50 சதவிகிதம் குறைந்தால் ரூ.7.5+ஜி.எஸ்.டி அபராதம் விதிக்கப்படும்.
இருப்புத்தொகையில் 50 சதவிகிதம் குறைந்தால் ரூ.10+ஜி.எஸ்.டி அபராதம் விதிக்கப்படும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.