Home /News /business /

கிரெடிட் கார்டு வாங்க ஆசையா..? எஸ்பிஐ தரும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

கிரெடிட் கார்டு வாங்க ஆசையா..? எஸ்பிஐ தரும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

எஸ்பிஐ

எஸ்பிஐ

SBI : இந்த கார்டை பயன்படுத்துபவர்களுக்கு ஆண்டு உறுப்பினர் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். .

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    SBI வங்கி ஃபிட்னஸ் மற்றும் ஹெல்த் ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு தனித்துவமான கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உடற்பயிற்சி ஆர்வலர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை பல்வேறு ஆன்லைன் ஒர்க்-அவுட் செக்ஷன்களை பெறவும், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஜிம்கள் மற்றும் ஃபிட்னஸ் ஸ்டுடியோக்களில் உறுப்பினராகவும் அனுமதிக்கிறது.

    விசா சிக்னேச்சர் பிளாட்ஃபார்மில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த புதிய கிரெடிட் கார்டு "பல்ஸ்" (PULSE) என்று குறிப்பிடப்படுகிறது. , ஃபிட்னஸ் மற்றும் ஹெல்த் தொடர்பான பலன்களை வழங்கும் முதல் வகை கிரெடிட் கார்டான ‘SBI Card PULSE’-க்கான ஆண்டு உறுப்பினர் கட்டணம் (annual membership charge) ரூ.1,499 ஆகும். PULSE கார்டு மெம்பர் ஒரு ஆண்டிற்குள் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் செலவழித்தால் அவரை ஊக்குவிக்கும் வகையில் புதுப்பித்தல் கட்டண தள்ளுபடி (renewal fee waiver) அதாவது ஆண்டு உறுப்பினர் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக SBI Cards வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில், "SBI Card PULSE ஆனது வாடிக்கையாளர்களுக்கு சேரும் கட்டணம் (joining fee) செலுத்தும் போது அவர்களுக்கு வரவேற்கத்தக்க பரிசாக ரூ.4,999 மதிப்புள்ள Noise ColorFit பல்ஸ் ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு, கார்டுதாரர்களின் ஆரோக்கியத்திற்கான முன்முயற்சி அணுகுமுறையை பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பட்ட அம்சங்கள் மற்றும் நன்மைகளுடன் இந்த கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது" தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையும் படிங்க.. ஆண்டுக்கு ரூ.12 போதும்... அரசு வழங்கும் ரூ.2 லட்சத்தை எப்படி பெறலாம் தெரியுமா?

    SBI Cards வழங்குவதாக அறிவித்து உள்ள Noise ColorFit பல்ஸ் ஸ்மார்ட் வாட்ச் 1.4 இன்ச் ஃபுல் கலர் டிஸ்ப்ளே, பிளட் ஆக்சிஜன் மானிட்டரிங் (SPO2), ஸ்லீப் மானிட்டரிங் போன்ற அம்சங்கள் அடங்கும். ஒரு வருட one-year Fitpass Pro மெம்பர்ஷிப் மூலம், SBI Card PULSE வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட ஜிம்கள் மற்றும் ஃபிட்னஸ் ஸ்டுடியோக்கள் கொண்ட நெட்வொர்க்கை அணுக முடியும். தவிர யோகா, டான்ஸ், கார்டியோ, பைலேட்ஸ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய உடற்பயிற்சிகளின் அன்லிமிட்டட் ஆன்லைன் ஃபிட்னஸ் செக்ஷன்களையும் பெறலாம்.

    SBI Card PULSE-ன் சிறப்பம்சங்கள்..

    * வெல்கம் பெனிஃபிட்:ரூ.4,999 மதிப்புள்ள Noise ColorFit PULSE ஸ்மார்ட் வாட்ச்

    * Fitpass Pro-வின் ஓராண்டு ஃப்ரீ மெம்பர்ஷிப், 4,000+ ஜிம்கள், ஃபிட்னஸ் மையங்களின் க்யூரேட்டட் நெட்வொர்க்கிற்கான அணுகல், வாரத்திற்கு 3 செக்ஷன்கள் வீதம் ஒரு மாதத்திற்கு 12 செக்ஷன்கள் வரை அனுமதி

    * ஃபிட்கோச் மற்றும் ஃபிட்ஃபீஸ்ட் மெம்பர்ஷிப்கள்

    ஓராண்டு இலவச Netmeds First Membership இதில் பின்வருவன அடங்கும்:

    * ஒரு வருடத்திற்கு அன்லிமிட்டட் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை

    இதையும் படிங்க.. அவசியமான தகவல்.. போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக் தொலைந்தால் உடனே செய்ய வேண்டியவை என்ன?

    * வருடாந்திர அடிப்படை சுகாதார பரிசோதனை

    * ஒவ்வொரு ப்ரீபெய்ட் ஆஃபரிலும் கூடுதல் 2.5% NMS கேஷ் (ரூ.100 வரை)

    * நோயியல் ஆய்வக (pathology lab) டெஸ்ட்களில் கூடுதல் 5% தள்ளுபடி

    * அன்லிமிட்டட் ஃப்ரீ மற்றும் டெலிவரி முன்னுரிமை



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bank, Fitness, SBI

    அடுத்த செய்தி