எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள்? உங்களிடம் எஸ்பிஐ டெபிட் கார்டு உள்ளதா? அப்படியென்றால், டெபிட் கார்டுகளை ஃபோன் கால் மூலமாகவும், எஸ்எம்எஸ் மூலமாக பிளாக் செய்து கொள்வதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி வழங்குகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கார்டு பிளாக் செய்ய வேண்டிய தேவை ஏன் ஏற்படப் போகிறது என்ற கேள்வி எழுகிறதா? ஒருவேளை உங்களது டெபிட் கார்டை நீங்கள் தொலைத்து விட்டாலோ அல்லது யாரேனும் அதை உங்களிடம் இருந்து திருடி விட்டாலோ, அதுகுறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அந்த டெபிட் கார்டை பிளாக் செய்வதன் மூலமாக அதன் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்கி விட முடியும்.
STATE BANK: உயர்த்தப்பட்ட வட்டி.. எஸ்பிஐயில் லோன் எடுத்தவர்கள் ஜாக்கிரதை!
எஸ்எம்எஸ் மூலம் பிளாக் செய்வது எப்படி
உங்கள் எஸ்பிஐ ஏடிஎம் கார்டை நீங்கள் பிளாக் செய்ய வேண்டும் என்றால், வங்கியில் நீங்கள் ரெஜிஸ்டர் செய்துள்ள மொபைல் எண்ணில் இருந்து 567676 என்ற எண்ணுக்கு “BLOCKடெபிட் கார்டின் கடைசி நான்கு இலக்க எண்கள்’’ குறிப்பிட்டு மெசேஜ் அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் தொலைத்த டெபிட் கார்டின் கடைசி 4 நம்பர்கள் 9638 என்று வைத்துக் கொண்டால், BLOCK 9638 என்று மெசேஜ் டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
டோல் ஃப்ரீ நம்பர் மூலமாக பிளாக் செய்யலாம்
எஸ்எம்எஸ் வாயிலாக உங்கள் டெபிட் கார்டை லாக் செய்யலாம் என்றாலும், இலவச ஐவிஆர் சேவை எண்-ஐ தொடர்பு கொள்வதன் மூலமாகவும் அதைச் செய்ய இயலும். அத்துடன் புதிய ஏடிஎம் கார்டு பெறவும் அதன் மூலமாகவே நீங்கள் விண்ணப்பிக்கலாம். வங்கி கிளைக்கு நேரில் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பிறந்த குழந்தைக்கு இன்சூரன்ஸ் எடுக்க முடியுமா? முழு விபரம்!
இந்த வழிமுறைகளை நீங்கள் சரியாக கையாண்டீர்கள் என்றால், உங்கள் டெபிட் கார்டு வெற்றிகரமாக பிளாக் செய்யப்படும். அதை உறுதி செய்வதற்கான மெசேஜ் உங்கள் ரெஜிஸ்டர்டு மொபைல் எண்ணுக்கு வந்துவிடும்.
ஆன்லைன் மூலமாக புதிய கார்டு பெறுவது எப்படி
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: SBI, SBI ATM, STATE BANK, State Bank of India