• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • 2 நிமிடத்தில் கார்டு வாங்கும் வசதி.. வாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கியின் அசத்தல் சேவை!

2 நிமிடத்தில் கார்டு வாங்கும் வசதி.. வாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கியின் அசத்தல் சேவை!

பிரபல வங்கியின் அப்டேட்

பிரபல வங்கியின் அப்டேட்

இதுப்பற்றி தெரியாதவர்கள் எளிமையாக இந்த படிகளை பின்பற்றி செய்தாலே போதும்.

  • Share this:
    எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் சூப்பரான சேவை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மிகச்சிறந்த வாடிக்கையாளர்கள் சேவை திட்டங்களைக் கொண்டிடுள்ளது. அதில் ஒன்று தான் 2 நிமிடத்தில் வீட்டில் இருந்தப்படியே எஸ்பிஐ ஏடிஎம் கார்டை வாங்கும் வசதி.இதுப்பற்றி தெரியாதவர்கள் எளிமையாக இந்த படிகளை பின்பற்றி செய்தாலே போதும். அதேப்போல் ஒருவேளை ஏடிஎம் கார்டு தொலைந்தால் அதை வீட்டில் இருந்தப்படியே உடனடியாக பிளாக் செய்யும் வசதி குறித்தும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்கள், அதிக படிப்பு இல்லாதவர்கள் இதுப்பற்றி தெரியாமல் வங்கிகளுக்கு வீண் அலைச்சலாக சென்று வருகின்றனர். அவர்களுக்கும் இந்த பதிவு உதவும்.

    எஸ்பிஐ ஏடிம் கார்டு உங்களிடம் ஏற்கெனவே இருந்து அது தொலைந்து விட்டாலும் நீங்கள் ஆன்லைனில் லாக் செய்துவிட்டு மீண்டும் அப்ளை செய்யலாம். அல்லது புதிய கார்டு வேண்டுமென்றால் அப்ளை செய்யலாம். அதற்கு முதலில் ஸ்டேட் பேங்கின் நெட் பேங்கிக்கு செல்ல வேண்டும். அதில் இருக்கும் ’e-services’ பிரிவில் இருக்கும் ATM card services வசதியை தேர்வு செய்து எஸ்பிஐ யின் புதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் . ‘Request ATM/Debit Card’ பட்டனை கிளிக் செய்த உடனே, வங்கியில் பதிவு செய்திருக்கும் மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டாலே போதும்.



    5 வேலை நாட்களுக்குள் உங்களின் வீட்டுக்கு புதிய ஏடிஎம் கார்டு தேடி வரும். இதற்கு மொத்தமாகவே 2 நிமிடம் தான் எடுக்கும். வங்கிக்கு போய் படிவத்தை நிரப்பி கார்டை பெறவேண்டிய அவசியமோ வீண் அலைச்சலோ உங்களுக்கு வேண்டாம். இதே போல் தான், தொலைந்த உங்கள் ஏடிஎம் கார்டை பிளாக் செய்வது,.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதே படிகளைப் பின்பற்றி 'block atm card' பட்டனை கிளிக் செய்தால் போது பிளாக் செய்வதற்கான காரணத்தை கேட்ட பின்பு அதை உறுதி செய்ததும் உங்களுடைய கார்டு பிளாக் செய்யப்பட்டு விடும். இதே போல் எஸ்பிஐ யோனா ஆப்பிலும் ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் பிளாக் செய்யலாம். அதுக்குறித்த விவரங்களை அடுத்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: