எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிச் சேவை பெற முடியாது என கவலை கொள்ளத் தேவையில்லை. இந்தியாவின் மாபெரும் பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கியானது சமீபத்தில் இரண்டு டோல் ஃப்ரீ நம்பர்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற வங்கிச் சேவைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த டோல் ஃப்ரீ எண்களின் அறிமுகம் காரணமாக, இனி வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவையை பெறுவதற்காக வங்கியில் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. வாடிக்கையாளர்களின் வசதிக்காக 1800 1234 மற்றும் 1800 2100 என்ற இலவச தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக வாடிக்கௌயாளர்களுக்கு 44 விதமான சேவைகள் வழங்கப்படுகின்றன என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சமீபத்திய எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கி சார்ந்த உங்களின் அனைத்து கவலைகளுக்கும் இனி குட்பை சொல்லி விடுங்கள். எஸ்பிஐ சேவை மைய எண்களான 1800 1234 மற்றும் 1800 2100 என்ற எண்களுக்கு அழைத்திடுங்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் எந்தவொரு இடத்தில் இருந்தும், எந்தவொரு நேரத்திலும் வங்கிச் சேவைகளை பெற முடியும்.
ஆகவே, வங்கிச் சேவைகளுக்காக வங்கிகளுக்கு அலைந்து திரியும் நேரத்தை இது சேமிக்கக் கூடியதகவும், தடையற்ற சேவைகளை வழங்கக் கூடியதாகவும் அமையும் என்று கருதப்படுகிறது. எஸ்பிஐ இணையதள சேவைகள் அல்லது ஆப் சேவைகள் போன்ற டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமாக அமையும் என்று கருதப்படுகிறது.
Also Read : FIXED DEPOSIT : இதுதான் சரியான நேரம்.. பிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்திய டாப் வங்கிகள்!
என்னென்ன சேவைகளை நீங்கள் பெற முடியும்
எஸ்பிஐ டோல் ஃப்ரி வசதி மூலமாக எண்ணற்ற சேவைகளை நீங்கள் பெற முடியும். இந்த சேவையானது 24 மணி நேரமும், அனைத்து நாட்களிலும் செயல்படக் கூடியது. குறிப்பாக ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் இந்தச் சேவையை பெற முடியும். வாடிக்கையாளர்கள் தங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகள் ஆகியவற்றை இதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
ஏடிஎம் கார்டு பிளாக்கிங் சேவை மற்றும் கார்டு விடுவிப்பு சேவை ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். தங்களுக்கான செக் புக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ள நிலை குறித்தும், ஏதேனும் காரணமாக ஏடிஎம் கார்டு பிளாக் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Also Read : ATM கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்... இந்த 5 விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!
உங்களுடைய டெபாஸிட் மற்றும் லோன் அக்கவுண்ட் விவரங்களை இந்த டோல் ஃப்ரி நம்பர்கள் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
இதர டோல் ஃப்ரீ எண்கள்
டோல் ஃப்ரீ எண் : 1800 11 2211
டோல் ஃப்ரீ எண் : 1800 425 3800
டோல் ஃப்ரீ எண் : 080 265 999 90
ஒருவேளை எஸ்பிஐ வங்கிச் சேவைகள் உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், அதுகுறித்து UNHAPPY என்று 8008 20 20 20 என்ற எண்ணுக்கு நீங்கள் எஸ்எம்எஸ் அனுப்ப முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.