முகப்பு /செய்தி /வணிகம் / SBI கஸ்டமர்ஸ் புது மொபைல் நம்பர் வாங்கிய உடனே செய்ய வேண்டியவை! ரொம்ப ரொம்ப முக்கியம்

SBI கஸ்டமர்ஸ் புது மொபைல் நம்பர் வாங்கிய உடனே செய்ய வேண்டியவை! ரொம்ப ரொம்ப முக்கியம்

பிஎஃப் - பான்

பிஎஃப் - பான்

SBI வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை கையில் வைத்து இருக்க வேண்டும்,

  • Last Updated :

எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் சமீபத்தில் உங்கள் மொபைல் நம்பரை மாற்றியிருந்தால் அல்லது புது மொபைல் நம்பர் வாங்கி இருந்தால் இந்த தகவலை தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம்.

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில், லட்சக் கணக்கான மக்கள் பலவிதமான அக்கவுண்டுகளை தொடர்கின்றனர். சேமிப்பு கணக்கு, சேலரி கணக்கு, பிக்சட் டெபாசிட், கரணட் அக்கவுண்ட் போன்ற கணக்குகளை கொண்டிருப்பவர்கள் எஸ்பிஐ வங்கி அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகையில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுப்பதில் கூட ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதாவது செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பர் வைத்து தான், பணத்தை எடுக்க முடியும் .

அதே போல் ஆன்லைன் பரிவர்த்தனையில் எந்த மோசடியும் நடந்து விட கூடாது என வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது வலியுறுத்துவது, போலி மேசேஜ்களை கண்டு ஏமாற வேண்டாம் என மெசேஜ் வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் கஸ்டமர்ஸ் கையில் இருக்க வேண்டும், ஒருவேளை நம்பரை மாற்றினாலோ புது நம்பர் வாங்கினாலோ அதை உடனடியாக வங்கிக்கு தெரியப்படுத்தும்படி அறிவுருத்தி வருகிறது.

இதையும் படிங்க.. ரூ.200-க்குள் ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்கள் இந்த ஆஃபர்களை யூஸ் பண்ணிக்கலாம்!

நம்பரை மாற்றிய வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாக சென்று தெரியப்படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆன்லைனிலும் அதை அப்டேட் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை எப்படி செய்வது என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

எஸ்பிஐ நெட் பேக்கிங் மூலம் வாடிக்கையாளர்கள் இதை செய்ய முடியும். அதற்கு முதலில் எஸ்பிஐ வங்கியின் ஆன்லைன் தளமான

http://www.onlinesbi.com பக்கத்தில் லாகின் செய்ய வேண்டும். பின்பு அதில் இருக்கும் My accounts பிரிவின் கீழ், Profile – personal details – change mobile no ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஸ்கிரினில் வங்கி எண் மற்றும் மொபைல் நம்பர் பதிவிட்டு submit பட்டனை கொடுக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு வாங்க ஆசையா..? எஸ்பிஐ தரும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

பதிவிட்ட மொபைல் நம்பரின் கடைசி இரண்டு நம்பரும் மட்டும் உறுதிப்படுத்துவதற்காக திரையில் தோன்றும்.இப்படி ஒரு மெசேஜை திரையில் பார்த்தல் போது உங்களுடைய நம்பர் அப்டேட் ஆகிவிட்டது என அர்த்தம்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Bank accounts, SBI, State Bank of India