ஜூலை மாதம் துவங்கி உள்ள நிலையில் வங்கித் துறையில் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. SBI ஏடிஎம்-களில் பணம் எடுப்பதற்கான விதிகள் முதல் ஐடிஆர் ஃபைலிங் (ITR filing) வரை 5 விஷயங்கள் இந்த மாதத்திலிருந்து மாற்றங்களை சந்திக்க போகின்றன.
இது தவிர ஜூலை 2021-ல் வங்கித் துறையிலும் வேறு பல மாற்றங்கள் நிகழப்போகின்றன. நாட்டின் மிக பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவை பொறுத்த வரை, இந்த மாதம் முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றியுள்ளது. அதே போல இந்த மாதத்திலிருந்து சில வரி செலுத்துவோர் அதிக விகிதத்தில் TDS-ஸை எதிர்கொள்ள கூடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலைகளும் இந்த மாதத்திலிருந்து திருத்தப்பட்டு உயர்வை சந்தித்துள்ளது. ஜூலை 1 (இன்று) முதல் நாட்டில் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்களின் விரிவான பட்டியலை இங்கே பார்க்கலாம்.
ALSO READ | கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு - விவசாய நிலம் பாதிப்பு - இழப்பீடு அளிக்க #ONGC க்கு ஆட்சியர் உத்தரவு
SBI -ன் திருத்தப்பட்ட சேவை கட்டணங்கள்:
SBI ஏடிஎம்-களிலிருந்தும், கிளைகளிலிருந்தும் பணம் எடுப்பதற்கு இனி வங்கி கட்டணம் வசூலிக்க உள்ளதை SBI வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். வங்கிக் கிளை அல்லது ஏடிஎம்-களில் இனி மதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.15 மற்றும் + ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும். SBI ஏடிஎம் மட்டுமின்றி பிற வங்கிகளின் ஏடிஎம்-களில் SBI வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும் இதே கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
செக் புக் பயன்பாட்டிற்கான கட்டணம் உயர்வு:
SBI வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இன்று முதல் செக் புக் பயன்படுத்த லிமிட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி, அக்கவுண்ட் ஹோல்டர்கள் ஒரு நிதியாண்டில் 10 செக்குகளை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.
ALSO READ | எஸ்.பி.ஐ ஏடிஎம் பயன்பாட்டாளர்கள் கவனத்துக்கு...
இந்த லிமிட் முடிந்த பிறகு அடுத்த 10 செக் லீஃப்களை பயன்படுத்தும் போது ரூ.40 + ஜிஎஸ்டி கட்டணமாகவும் அல்லது அடுத்தடுத்த 25 செக் லீஃப்களுக்கு ரூ.75 + ஜிஎஸ்டி-யை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல 10 எமர்ஜென்சி செக் புக் பயன்படுத்த ரூ.50 + ஜிஎஸ்டி கட்டணமாக செலுத்த வேண்டும்.
எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றங்கள்:
ஒவ்வொரு மாதமும் முதல் எல்பிஜி சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (ஓஎம்சி) இன்று முதல் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அதிகரித்துள்ளன. இதனை அடுத்து உள்நாட்டு எல்பிஜி சிலிண்டரின் விலை மானியத்துடன் சிலிண்டருக்கு ரூ.25.50 வரை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மானிய சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.850-ஆக அதிகரித்து உள்ளது.
ALSO READ | ஆவின்பால் உற்பத்தியாளர் சங்கத்தில் நிரப்பபட்ட 460 பணியிடங்கள் நிறுத்திவைப்பு - பால்வளத்துறை அமைச்சர் நாசர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த மாதத்திலிருந்து அதிக டி.டி.எஸ்:
கடந்த 2 ஆண்டுகளாக ஐடிஆர் டெபாசிட் செய்யாதவர்களுக்கு ஜூலை 1 முதல் டி.டி.எஸ் விகிதத்தில் அதிக வரி விதிக்க உள்ளது மத்திய அரசு. 2021-ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் மூலம் வருமான வரி விதிகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, ஆண்டுக்கு ரூ.50,000-க்கு மேல் டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில், இரட்டிப்பு வரி பிடித்தம் செய்யப்படும்.
புதிய ஐ.எஃப்.எஸ்.சி கோட்:
சிண்டிகேட் வங்கி - கனரா வங்கி இணைக்கப்பட்டதை அடுத்து சிண்டிகேட் வங்கியின் முன்னாள் வாடிக்கையாளர்கள் இன்று முதல் புதிய ஐஎஃப்எஸ்சி குறியீடுகளை பெறுவார்கள்.
ALSO READ | ரஜினி தரப்பில் இருந்து கஸ்தூரியிடம் யாரும் பேசவில்லை - மக்கள் தொடர்பாளர் விளக்கம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.