ஹோம் /நியூஸ் /வணிகம் /

சேவை கட்டணம் எவ்வளவு? ஏன்? SBI வாடிக்கையாளர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

சேவை கட்டணம் எவ்வளவு? ஏன்? SBI வாடிக்கையாளர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

ஸ்டேட் பேங்க்

ஸ்டேட் பேங்க்

SBI | பல்வேறு நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான SBI-ன் சர்விஸ் சார்ஜ் பற்றி இப்போது பார்க்கலாம்.

  • Trending Desk
  • 1 minute read
  • Last Updated :

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கும், கிளைகளில் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவும், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் பல பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு சில கட்டணங்களை விதிக்கின்றன.

சில வங்கிகள் மினிமம் அக்கவுண்ட் பேலன்ஸ் தொகையை பராமரிக்காமல் விட்டாலும் குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கின்றன. வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில் SBI வங்கியும் வேறுபட்டதல்ல என்றாலும் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை பராமரிக்காமல் (non-maintenance of average monthly balance) விடுவதற்காக விதிக்கப்படும் அபராதத் தொகையை தள்ளுபடி செய்துள்ளது.

அதே போல பல சேவைகளுக்கான SBI பரிவர்த்தனை கட்டணங்கள், கிளையின் இருப்பிடம் அல்லது அக்கவுண்ட்டில் குறைந்தபட்ச இருப்பு போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. பல்வேறு நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான SBI-ன் சர்விஸ் சார்ஜ் பற்றி இப்போது பார்க்கலாம்.

PM Kisan status : 12-வது தவணை எப்போது வரும்? வெளியானது புதிய தகவல்!

ATM பரிவர்த்தனை கட்டணம்: சராசரியாக ரூ.1 லட்சம் வரை மாதாந்திர இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், SBI ஏடிஎம்-களில் மாதத்திற்கு முதல் 5 பரிவர்த்தனைகளுக்கு, இலவச பரிவர்த்தனை வரம்பை பெறுவார்கள். பிற வங்கிகளின் ஏடிஎம்-களுக்கு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 6 மெட்ரோ நகரங்களில் இலவச பரிவர்த்தனை வரம்பு மூன்றாகவும், மற்ற இடங்களுக்கு ஐந்தாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. சராசரியாக ரூ.1 லட்சத்துக்கு மேல் மாதாந்திர இருப்புத் தொகையை பராமரிக்கும் SBI வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற இலவச பரிவர்த்தனை அணுகல் (unlimited free transaction access) வழங்கப்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு அப்பாற்பட்ட நிதி பரிவர்த்தனைகளுக்கான கட்டணமாக ரூ.20 சேவை கட்டணம் விதிக்கப்படுகிறது. தவிர நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு, நிர்ணயிக்கப்பட்ட வரம்பு முடிந்ததும், ஏடிஎம்-களில் சேவை கட்டணமாக ரூ.5 மற்றும் பிற வங்கி ஏடிஎம்-களில் ரூ.8 மற்றும் வரிகளை SBI வங்கி வசூலிக்கிறது.

சராசரி மாதாந்திர இருப்பை பராமரிக்காமல் விடுவது மார்ச் 2020 முதல் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட்களில் சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை பராமரிக்காததற்கான் அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக SBI தனது வெப்சைட்டில் தெரிவித்துள்ளது. முன்னதாக மெட்ரோ, செமி-அர்பன் அல்லது கிராமப்புற மண்டலமாக இருந்தாலும் கிளையின் இருப்பிடத்தைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.15 வரை SBI அபராதம் விதித்து வந்தது.
SBI ஏடிஎம்-ல் பணம் பெறுவதற்கான (cash Withdrawal) கட்டணங்கள்.. இலவச வரம்பை மீறி செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிமாற்றத்திற்கும், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.10 வீதம் எஸ்பிஐ வசூலிக்கிறது. மற்ற வங்கி ஏடிஎம்-களில் செய்யப்படும் ஒவ்வொரு கூடுதல் பண பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளரிடமிருந்து ரூ.20 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. தவிர போதுமான இருப்பு இல்லாமல் நிராகரிக்கப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், ரூ.20 + ஜிஎஸ்டி-யைசேவைக் கட்டணமாக வசூலிக்கிறது SBI.
SBI வங்கியில் எஸ்பிஐ பணம் பெறுவதற்கான கட்டணம்.. வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம்-கள் என இரண்டிலுமே 4 இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் போகும் போது கட்டணங்களை வசூலிக்கிறது. பிராஞ்ச் சேனல் / ஏடிஎம்-மில் ஒரு ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்கு ரூ.15 + ஜிஎஸ்டி-யை வங்கி வசூலிக்கிறது.
செக் புக் சர்விஸ் சார்ஜ்: ஒரு நிதியாண்டில் முதல் 10 செக் லீவ்ஸ்களை இலவசமாக வழங்குகிறது SBI. அதன் பிறகு 10 லீவ்ஸ்கொண்ட செக்புக்கிற்கு ரூ.40 + ஜிஎஸ்டி, 25 லீவ்ஸ் கொண்ட செக்புக்கிற்கு ரூ.75 + ஜிஎஸ்டி-யை சேவை கட்டணமாக வசூலிக்கிறது SBI. எமெர்ஜென்சி செக்புக்ஸ்களுக்கு 10 செக் லீவ்ஸ்களை கொண்ட செக்புக்கிற்கு ரூ.50 + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.
First published:

Tags: SBI, SBI Bank