• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ’டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு பான் எண்ணை இணைக்க வேண்டும்..’ - எஸ்பிஐ வங்கி அறிவிப்பு..

’டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு பான் எண்ணை இணைக்க வேண்டும்..’ - எஸ்பிஐ வங்கி அறிவிப்பு..

எஸ்பிஐ

எஸ்பிஐ

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் பான் கார்டு விவரங்களை புதுப்பிக்குமாறு கேட்டு கொண்டுள்ளது.

  • Share this:
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி உள்ளது. இந்த வங்கி தனது வடிக்கையாளர்களுக்கு தேவையான விவரங்களை உடனுக்குடன் வழங்குவதில் கவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எஸ்பிஐ டெபிட் கார்டுகள் மூலம் தடையற்ற சர்வதேச பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் பான் கார்டு விவரங்களை புதுப்பிக்குமாறு கேட்டு கொண்டுள்ளது.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள எஸ்பிஐ வங்கி, "சர்வதேச பரிவர்த்தனைகளில் சிக்கல் உள்ளதா? எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் தடையற்ற வெளிநாட்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கியில் உங்கள் பான் விவரங்களை புதுப்பிக்கவும்." என்று குறிப்பிட்டுள்ளது. ஆன்லைனில் அல்லது வங்கி கிளைக்கு நேரடியாக சென்று உங்கள் பான் எண்ணை உங்கள் எஸ்பிஐ வங்கி கணக்குடன் இணைக்கலாம். பான் எண்ணை இணைத்தால் தான் அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஆன்லைனில் உங்கள் எஸ்பிஐ அக்கவுண்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான முறைகள் :

* முதலில் உங்கள் எஸ்பிஐ இன்டர்நெட் பேங்கிங்கிற்கு சென்று, ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து உள்நுழையவும்.

* பின்னர் 'e-services' என்பதை கிளிக் செய்து PAN registration பொத்தானை அழுத்தவும்.

* இப்போது தோன்றும் பக்கத்தில் நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் பாஸ்வேர்டை உறுதி செய்யவும்.

* இதனை தொடர்ந்து Transaction Account என்பதை கிளிக் செய்து உங்கள் பான் கார்டு விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.

* நீங்கள் சமர்ப்பித்த பிறகு, ஒரு OTP உறுவாக்கப்பட்டு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

* OTP ஐ உள்ளிட்டு உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்

* உங்கள் பான் எண்ணை உங்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கான உங்கள் கோரிக்கை வங்கி கிளைக்கு அனுப்பப்படும்.

* இதன் பின்னர் உங்கள் பான் எண் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டவுடன், வங்கி அதை உறுதிப்படுத்தி ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி உங்களுக்கு தகவலை தெரிவிக்கும்.

நேரடியாக வங்கிக்கு சென்று பான் கார்டை இணைப்பதற்கான முறைகள் :

* உங்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்குடன் உங்கள் பான் எண்ணை இணைக்க, நீங்கள் பான் கார்டு நகலுடன் உங்கள் வங்கி கிளைக்கு செல்ல வேண்டும்.

* வங்கி கிளையில் வழங்கும் படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் பான் கார்டின் நகலுடன் சமர்ப்பிக்கவும்.

* வங்கி அதிகாரி சரிபார்ப்பு பணிக்காக உங்கள் அசல் பான் கார்டையும் கேட்கலாம் என்பதால் அதையும் எடுத்து செல்வது நல்லது.

* சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் நீங்கள் பதிவு செய்திருந்த மொபைல் எண்ணில் வங்கியில் இருந்து எஸ்எம்எஸ் வரும். அதன் மூலம் உங்கள் பான் எண், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுவிட்டது என்ற தகவலை உறுதி செய்துகொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: