Home /News /business /

SBI : கல்லூரியில் படிக்க ரூ. 50 லட்சம் வரை லோன் தரும் ஸ்டேட் பேங்க்! அப்ளை செய்யும் முறை

SBI : கல்லூரியில் படிக்க ரூ. 50 லட்சம் வரை லோன் தரும் ஸ்டேட் பேங்க்! அப்ளை செய்யும் முறை

எஸ்பிஐ லோன்

எஸ்பிஐ லோன்

SBI Apply for Educational Loan : இந்தியாவில் படிக்க ரூ.50 லட்சம் வரையிலும், வெளிநாட்டில் படிக்க ரூ.1.50 கோடி வரையிலும் SBI-ன் ஸ்டூடன்ட் லோன் மூலம் மாணவர்கள் கடன் பெறலாம்.

    இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர விரும்பும் இந்திய குடிமக்களுக்கு மாணவர் கடனை (Student Loan - ஸ்டூடன்ட் லோன்) வழங்கி வருகிறது. பொதுவாக SBI ஸ்டூடன்ட் லோன் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள படிப்புகளை பயில வழங்கப்படுகிறது.

    SBI வழங்கும் ஸ்டூடன்ட் லோனின் அம்சங்கள் மற்றும் நன்மைகள்..

    * குறைந்த வட்டி விகிதங்கள்

    * பெண்களுக்கு வட்டி சலுகை

    * ரூ.7.5 லட்சம் வரையிலான கடனுக்கு பிணைய பாதுகாப்பு (Collateral Security) தேவை இல்லை

    * ரூ.20 லட்சம் வரையிலான கடனுக்கு செயலாக்க கட்டணம் (processing charges)இல்லை

    * படிப்பை முடித்த ஒரு வருடத்திற்குப் பிறகே கடனை திருப்பி செலுத்தும் காலம் தொடங்கும்

    * படிப்பை முடித்த பிறகு 15 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்த அவகாசம் வழங்கப்படும்

    also read.. நீண்ட நாள் எதிர்பார்ப்பு.. அஞ்சல் சேமிப்பில் இனி பணத்தை ஈஸியா அனுப்பலாம்!

    * ஒருவேளை அடுத்த உயர் படிப்புக்காக இரண்டாவது முறை கடன் வாங்கினால், மாணவர்கள் அந்த இரண்டாம் படிப்பை முடித்த பிறகு 2 கடன்களுக்கும் சேர்த்து தொகையை அடுத்த 15 ஆண்டுகளில் திருப்பி செலுத்த துவங்கலாம்.

    * ரூ.4 லட்சம் வரையிலான கடன்களுக்கு மார்ஜின் இல்லை

    SBI ஸ்டூடன்ட் லோன் அமவுண்ட்:

    இந்தியாவில் படிக்க ரூ.50 லட்சம் வரையிலும், வெளிநாட்டில் படிக்க ரூ.1.50 கோடி வரையிலும் SBI-ன் ஸ்டூடன்ட் லோன் மூலம் மாணவர்கள் கடன் பெறலாம்.

    கடனுக்கான வட்டி விகிதம்:

    வட்டி விகிதம் - 8.65%

    பெண் மாணவர்களுக்கு வட்டியில் 0.50% சலுகை

    ஸ்டூடன்ட் லோன் ப்ராசஸிங் சார்ஜ்:

    ரூ.20 லட்சம் வரையிலான கடனுக்கு ப்ராசஸிங் கட்டணம் இல்லை. ரூ.20 லட்சத்துக்கும் மேல் கொடுக்கப்படும் மாணவர் கடன்களுக்கு வரிகளையும் சேர்த்து ரூ.10,000 ப்ராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும்.

    கடன் பிணையம்..

    ரூ.7.5 லட்சம் வரையிலான மாணவர் கடனுக்கு பிணைய பாதுகாப்பு தேவை இல்லை. அதே சமயம் ரூ.7.5 லட்சத்திற்கும் மேலான கடன்களுக்கு பிணைய பாதுகாப்பு தேவை.

    SBI ஸ்டூடன்ட் லோனில் கவராகும் செலவுகள்:

    * கல்லூரி/பள்ளி/விடுதிக்கு செலுத்த வேண்டிய கட்டணம்

    * தேர்வு/நூலகம்/ஆய்வக கட்டணம்

    * படிப்பிற்கு அவசியமானவையான புத்தகங்கள் / உபகரணங்கள் / கருவிகள் / சீருடைகள்/ கணினிகள் வாங்குதல் (படிப்பை முடிப்பதற்குச் செலுத்த வேண்டிய மொத்தக் கல்விக் கட்டணத்தில் அதிகபட்சம் 20%)

    * கட்டிட நிதி/திரும்பப்பெறக்கூடிய வைப்பு தொகை (முழு படிப்புக்கான கல்விக் கட்டணத்தில் அதிகபட்சம் 10%)

    also read.. state bank alert : எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த மெசேஜ் வந்தா உடனே டெலிட் பண்ணிடுங்க!

    * பயண செலவுகள் / படிப்பு சுற்றுப்பயணங்கள் (study tours), ப்ராஜெக்ட் வேலைகள் போன்ற கோர்ஸை முடிக்க தேவையான பிற அத்தியாவசிய செலவுகள்

    SBI ஸ்டூடன்ட் லோனை பெறுவதற்கான படிப்புகள்..

    யுஜிசி/ஏஐசிடிஇ/ஐஎம்சி/அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் வழக்கமான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பட்டம்/டிப்ளமோ படிப்புகள் உட்பட பட்டப்படிப்பு, முதுகலை படிப்புகளுக்கும், ஐஐடி, ஐஐஎம் போன்ற தன்னாட்சி நிறுவனங்களால் நடத்தப்படும் வழக்கமான டிகிரி/ டிப்ளமோ படிப்புகளுக்கும் SBI மாணவர் கடன்களை வழங்குகிறது.

    மேலும் மத்திய அரசு அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி/ செவிலியர் படிப்புகளுக்கும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல்/கப்பல்/ சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விமானப் போக்குவரத்து, விமானப் பயிற்சி, கப்பல் போக்குவரத்து போன்ற வழக்கமான டிகிரி/டிப்ளமோ படிப்புகளுக்கும் வழங்கப்படும்.

    வெளிநாடுகளுக்கு சென்று படிக்க கூடிய படிப்புகள் என்னும் போது வேலை சார்ந்த தொழில்/தொழில்நுட்ப பட்டப்படிப்பு படிப்புகள்/ முதுகலை பட்டப்படிப்பு மற்றும் எம்சிஏ, எம்பிஏ, எம்எஸ் போன்ற படிப்புகளுக்கு SBI ஸ்டூடன்ட் லோன் வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான லண்டன் CIMA, அமெரிக்காவில் இருக்கும் CPA உள்ளிட்டவற்றில் இருக்கும் கோர்ஸ்களை படிக்கவும் SBI ஸ்டூடன்ட் லோன்களை வழங்குகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: SBI, STATE BANK, State Bank of India

    அடுத்த செய்தி