ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுக்குறித்து பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நாட்டின் மிகப்பெரிய வங்கி சேவையை வழங்கி வருவது அனைவருக்கும் தெரியும். எஸ்பிஐக்கு இந்தியாவில் 22,000 கிளைகளும், 57,889 ஏடிஎம்களும் உள்ளது.கடந்த வருட கணக்கீட்டின் படி எஸ்பிஐ வங்கி 85 மில்லியன் இன்டர்நேட் பேங்கிங் மற்றும் 19 மில்லியன் மொபைல் பேங்கிங் பயனாளர்களையும் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லை எஸ்பிஐ யோனோ 34.5 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களை கொண்டுள்ளது.
மக்களின் வசதிக்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் யோனோ மற்றும் யோனோ லைட் ஆப்கள் நடைமுறையில் உள்ளன.இவை அனைத்துவிதமான ஸ்மார்ட் போன் பயனாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனைகள், டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ஷாப்பிங், பணம் செலுத்துதல், ரீசார்ஜ் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வங்கி நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளனர். அதுக்குறித்து முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
அதாவது எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில், பராமரிப்பு பணிகள் காரணமாக வங்கியில் இண்டர்நெட்
பேங்கிங் சேவை, யோனோ, யோனா லைட், UPI சேவைகள் அக்டோபர் 9 மற்றும் 10 தேதிகளில் மொத்தம் 120 நிமிடங்களுக்கு ( 2மணி நேரம்) இயங்காது. வாடிக்கையாளர்கள் அதை பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது. 9 ஆம் தேதி இரவு 12:20 மணி முதல் அக்டோபர் 10 இரவு 2:20 மணி வரை இயங்காது என தெரிவித்துள்ளது. அதே போல் 10 ஆம் தேதி இரவு 11:20 மணி முதல் அக்டோபர் 11 இரவு 1:20 மணி வரை இயங்காது.
எஸ்பிஐ இணைய சேவைகளான YONO, UPI , YONO Lite சேவையை வாடிக்கையாளர்கள் அந்த நேரத்தில் பயன்படுத்த முடியாது.இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது முக்கியமான பரிவர்த்தனைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.