ஹோம் /நியூஸ் /வணிகம் /

இத்தனை வருஷம் எஸ்பிஐ-ல் அக்கவுண்ட் வச்சிருங்கீங்களே இந்த தகவல் தெரியுமா?

இத்தனை வருஷம் எஸ்பிஐ-ல் அக்கவுண்ட் வச்சிருங்கீங்களே இந்த தகவல் தெரியுமா?

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.20,000 வரையில் வீட்டிலிருந்தப்படியே பணம் எடுக்க முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

sbi account state bank of india online : எஸ்பிஐயில் பலகோடி மக்கள் சேமிப்பு கணக்கை செயல்பாட்டில் வைத்திருந்தாலும் இந்த வசதி குறித்து தெரியாதவர்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கிகளில் முதலிடத்தில் இருப்பது எஸ்பிஐ தான். இந்த வங்கியில் கோடி கணக்கான மக்கள் சேமிப்பு கணக்கை தொடர்கிறார்கள். அதுமட்டுமில்லை ஃபிக்சட் டெபாசிட், சேலரி அக்கவுண்ட், ஜாயிண் அக்கவுண்ட் என ஏகப்பட்ட கணக்குகளை தொடங்கி செயல்பாட்டில் வைத்திருக்கின்றனர். இருப்பினும் பல பேருக்கு இதில் இருக்கும் சூப்பரான குறிப்பாக இந்த வசதி குறித்து தெரியவில்லை. அதற்காக தான் இந்த பதிவு.

5 வருஷம் கழிச்சு ரூ. 20 லட்சம் கிடைக்க இந்த சேமிப்பை தேர்ந்தெடுங்கள்!

ஸ்டேட் பேங்க் வங்கி வாடிக்கையாளர்கள் வீட்டில் அமர்ந்தபடியே வங்கிச் சேவைகளை எளிதாகப் பெறமுடியும். வாடிக்கையாளர்கள் ஒரு நாளில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.20,000 வரையில் வீட்டிலிருந்தப்படியே பணம் எடுக்க முடியும். ஆனால் இந்த வசதியை பெற முதலில் நீங்கள் உங்கள் வங்கி கணக்கு உள்ள பேங்கில் பதிவு செய்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு https://bank.sbi/dsb இந்த தளத்திற்கு செல்லவும்.

மேலும் 18001037188 அல்லது 18001213721 ஆகிய டோல் ஃப்ரீ நம்பர்களுக்கு அழைத்து முழு விவரங்களையும் கேட்டு அறியுங்கள். கவனத்தில் கொள்ளுங்கள் கண்டிப்பாக இச்சேவையைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு உள்ள வங்கிக் கிளையில்தான் பதிவுசெய்ய வேண்டும்.

கொரோனா நெருக்கடி சூழ்நிலையில் இந்த திட்டம் எஸ்பிஐ-யால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் இது சேவையில் உள்ளதா என்பதையும் ஒருமுறை செக் செய்து கொள்ளுங்கள். அப்படி இருந்தால் தயங்காமல் பயன்படுத்தி கொள்ளுங்கள். குறிப்பாக மூத்த குடிமகளுக்கு இது மிகவும் பயன்படும்.

மைனர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இச்சேவை பொருந்தாது. அதே போல் வங்கிக் கணக்கு உள்ள கிளைக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இருப்பவர்கள் மட்டுமே இந்த சிறப்பு திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: SBI