முகப்பு /செய்தி /வணிகம் / எஸ்பிஐ-யில் அக்கவுண்ட் இருக்கா? உங்களுக்காக வங்கி தரும் இந்த சேவைகள் பற்றி தெரியுமா?

எஸ்பிஐ-யில் அக்கவுண்ட் இருக்கா? உங்களுக்காக வங்கி தரும் இந்த சேவைகள் பற்றி தெரியுமா?

எஸ்பிஐ

எஸ்பிஐ

எளிமையாக வீட்டில் இருந்தப்படியே யோனோ செயலி மூலம் அக்கவுண்ட் தொடங்கலாம்.

  • Last Updated :

எஸ்பிஐ வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான். வங்கி உங்களுக்காக வழங்கும் சலுகைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நாட்டின் மிகச்சிறந்த பொதுத்துறை வங்கியாக உள்ளது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு, சேலரி கணக்கு, ஃபிக்சட் டெபாசிட் என எந்த கணக்கு வைத்திருந்தாலும் இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும். பொதுவாகவே நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் நமக்கு வழங்கும் சலுகைகள் குறித்து தெரிந்து வைத்து கொள்வது நல்லது. சில சமயங்களில் நமக்கே அந்த தகவல்கள் பயன்பெறும். அந்த வகையில் இன்று எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு வங்கி வழங்கும் சலுகைகள் பற்றி பார்ப்போம்.

எஸ்பிஐ வங்கியைப் பொருத்தவரையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்த வசதியும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது தான் எஸ்பிஐ யோனோ செயலி. இது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வங்கி சேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் தளமாக உள்ளது. ஆண்ட்ராய்டு மொபைல்கள் மற்றும் ஐபோன் போன்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ YONO மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து எளிமையாக எல்லாவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

சொன்ன போனால் ஒரு அக்கவுண்ட் தொடங்க வேண்டுமென்றால் கூட நீங்கள் எஸ்பிஐ வங்கிக்கு செல்ல தேவையில்லை. எளிமையாக வீட்டில் இருந்தப்படியே யோனோ செயலி மூலம் அக்கவுண்ட் தொடங்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் இந்த வசதியை வழங்குகிறது. இந்த செயலியில் வங்கின் பலதரப்பட்ட சேவைகளை பெற முடியும். பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யலாம். வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், போன்றவற்றை எளிதாகப் பெற இயலும்.  நிரந்தர வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி கணக்குகளைத் தொடங்கி முதலீடு செய்யலாம். ரயில் டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது.

இந்த யோனோ ஆப்பை டவுண்லோட் செய்து, அதில் கேட்கப்படும் ஆவணங்களை நீங்கள் பதிவு செய்து, கேயுசி படிவத்தை நிரப்பி அதை உறுதி செய்தாலே போதும். 5 நிமிடத்தில் எஸ்பிஐ வங்கியில் புதிய கணக்கை தொடங்கிவிடலாம். மேலும் இதுப்போன்ற பல வசதிகள் எஸ்பிஐ யோனோ செயலியில் உள்ளது. அதுக்குறித்து வரும் பதிவுகளில் தெரிந்து கொள்ளுங்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: News On Instagram, SBI