• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • எஸ்பிஐ பேங்கில் இப்படியொரு வசதி இருப்பது உங்களுக்கு தெரியுமா?

எஸ்பிஐ பேங்கில் இப்படியொரு வசதி இருப்பது உங்களுக்கு தெரியுமா?

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

லாகின் செய்யமாலே பேலன்ஸ் உட்பட அக்கவுண்ட் விவரங்களை பார்க்க முடியும் தெரியுமா?

  • Share this:
    எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? அக்கவுண்ட் பேலன்ஸை பார்க்க எஸ்பிஐயில் இப்படியொரு வசதி இருப்பது உங்களுக்கு தெரியுமா?

    இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் சேவையில் பல்வேறு வசதிகளை செயல்பாட்டில் வைத்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த பேலன்ஸ் செக்கிங் வசதி. எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பலருக்கும் இது குறித்த தகவல் தெரிவதில்லை. ஒருவேளை நீங்களும் எஸ்பிஐ கஸ்டமராக இருந்தால் இன்றாவது இதுக்குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அதாவது, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் லாகின் செய்யமாலே பேலன்ஸ் உட்பட அக்கவுண்ட் விவரங்களை பார்க்க முடியும் தெரியுமா?

    எஸ்பிஐயின் யோனோ செயலில் இந்த அம்சம் செயல்பாட்டில் உள்ளது. யோனோ செயலில் இருக்கும் pre-login features மூலம் உங்கள் அக்கவுண்டின் பேலன்ஸ் உட்பட சமீபத்திய பணப்பரிவர்த்தனை விவரங்கள், பாஸ் புக் ஆகியவற்றை லாகின் செய்யமாலே பார்க்கலாம். கூடவே குயிக் பே அம்மசமும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 6 இலக்க எம்பின் மூலம் அதில் பணப்பரிவர்த்தனை செய்யலாம். இந்த வசதி மூலம் ஒரு வாடிக்கையாளர் லாகின் செய்யாமலே ரூ.2000 வரை பணபரிவர்த்தனை செய்யலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதே போல் எஸ்பிஐயில் இருக்கும் மிகச் சிறந்த வசதியான திட்டங்களில் வீட்டில் இருந்தப்படியே ஏடிஎம் PIN நம்பரை உருவாக்கும் சேவையும் ஒன்று. ஏடிஎம்க்கு சென்று கார்டை உள்நுழைத்து பின்னை உருவாக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. IVR அழைப்பு சேவை மூலமாக மிகச் சுலபமாக ஏடிஎம் பின்னை உருவாக்கலாம் தெரியுமா?பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து 1800 112 211 அல்லது 1800 425 3800 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைக்கவும். ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு சேவைகளுக்கு எண் 2-ஐ அழுத்தவும். இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வெறும் நம்பர் வழியே நீங்கள் பதில் அளித்தால் போது உங்களுடைய ஏடிஎம் பின்னை உருவாக்கி கொள்ளலாம். இதுப்போன்ற பல சிறப்பான சேவைகள் எஸ்பிஐயில் வாடிக்கையாளர்கள் வசதிக்காக உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: