• HOME
 • »
 • NEWS
 • »
 • business
 • »
 • குழந்தைகளுக்காக நல்ல சேமிப்பை தேடும் பெற்றோர்கள்.. இதை கொஞ்சம் படியுங்கள்!

குழந்தைகளுக்காக நல்ல சேமிப்பை தேடும் பெற்றோர்கள்.. இதை கொஞ்சம் படியுங்கள்!

சேவிங்க்ஸ்

சேவிங்க்ஸ்

குழந்தைகளுக்காக நல்ல சேமிப்பை தேடும் பெற்றோர்கள் கவனத்திற்கு போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்காக செயல்பாட்டில் இருக்கும் முதலீடு திட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 • Share this:
  குழந்தை பிறந்ததுமே அவர்களின் எதிர்காலத்தை குறித்து பெற்றோர்கள் திட்டம் தீட்டி விடுகின்றனர்.

  ஏனெனில் இந்த காலகட்டத்தில் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதில் தொடங்கி படிப்பு முடிகின்ற வரையிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். இதற்கு சேமிப்பு மட்டுமே போதாது, அதையும் தாண்டி பலன் தரும் சில திட்டங்கள் இருக்கின்றன.கூடுதல் வட்டி மட்டுமின்றி உயர்கல்விக்கு கணிசமான தொகை கிடைக்க உதவும் திட்டங்கள் எவை என்று பார்ப்போம்.

  முதலில் இந்த பதிவில் முழுக்க முழுக்க ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள் பற்றி பார்க்கலாம். பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் (பிபிஎப்) கணக்கு,15 ஆண்டுகள் கொண்ட இந்தத் திட்டம் மூலம் குழந்தைகளின் கல்விக்கு ஏற்ற ஒரு தொகுப்பை பெற்றோர்களால் உருவாக்கித் தர முடியும். இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7.1 சதவீதம் ஆகும்.  இதில் கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரி விலக்கு உண்டு. அது மட்டுமல்ல, ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியின் 80சி பிரிவில் கீழ் வரிச் சலுகை பெற முடியும். முதலீடுக்கு ஏற்ற கவர்ச்சிகரமான திட்டம் இது. குழந்தைகள் கல்வியைக் கட்டமைக்க இது சிறந்த வழியாக இருக்கும். நீண்ட நாள் திட்டம் என்பது மட்டுமே தயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், கல்வி கட்டமைப்புக்கு பெரும் உதவியாக இருக்கும்.

  ஆண் குழந்தைக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள “பொன்மகன் சேமிப்பு திட்டம்” மூலமாக வைப்பு முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு 8.1% வட்டி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது என்கிறார்கள்.

  கலக்கும் இந்தியா போஸ்ட் திட்டங்கள்: சேமிப்பு ஆண்டுகள் முடிவதற்குள் பாதி பணம் கையில்!

  அடுத்தது ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்ஸ். அதாவது முதன்மையாக நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்றன. ஈக்விட்டி நிதி முதலீட்டாளர்கள் தனிப்பட்ட பத்திரங்களை வாங்குவதை விட எளிதாக ஒரு கூடை பங்குகளை வாங்க அனுமதிக்கின்றன. இந்த நிதிகளில் யாராவது முதலீடு செய்யும்போது, நிதியின் ஒவ்வொரு யூனிட்டிற்கும் அவர்கள் செலுத்தும் விலை நிகர சொத்து மதிப்பு (இல்லை). நிதியின் NAV ஐ கணக்கிடுவதன் மூலம் நிகர சொத்து மதிப்பு வந்து சேரும். பங்குச் சந்தையில் விலை ஏற்ற இறக்கங்களால் NAV நேரடியாக தொடர்புடையது.

  ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட் நீண்ட காலத்திற்கு ஒரு சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், குழந்தைகளுக்குச் சொத்து சேர்க்க அனைவரும் இதை நாடி செல்லும் நிலை உள்ளது. ஆனால், இதில் சில அபாயம் இருக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: