ரூ. 50 முதலீடு திட்டம் உங்கள் வாழ்வை மாற்ற போகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கிட்டதட்ட 30 லட்சம் உங்களுக்கு சொந்தமாக போகிறது.
பணம் சம்பாதித்தால் மட்டும் போதாது அதை சேமிக்கும் வழியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஓடி ஆடி சம்பாதிக்கும் காலத்தில் ஒரு சிறந்த முதலீடு திட்டத்தை தேர்ந்தெடுத்துவிட்டால் போதும் உங்கள் வாழ்க்கையே சூப்பராக மாறிவிடும். நீங்கள் செய்யும் முதலீடு ஓய்வு காலத்தில் உங்கள் வாழ்வை இனிமையாக்கும். கூடவே ஏராளமான நன்மைகளையும் தரும். அதுபோன்ற பல முதலீடு திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்றான என்.பி.எஸ் திட்டம் குறித்து தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.
இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு நீங்கள் ரூ .50 சேமித்தாலே போதும் நீங்கள் ஓய்வு பெறும் போது உங்களுக்கு ரூ .34 லட்சம் கிடைக்கும். குறிப்பாக . என்.பி.எஸ் சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடு ஆகும் அதனால் பணத்தை குறித்து உங்களுக்கு அச்சமோ சந்தேகமோ வேண்டாம். இந்த திட்டத்தின் கீழ், இரண்டு பங்குகளில் முதலீடு செய்யலாம். அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்கள். இந்த முதலீட்டில் உங்களுக்கு கிடைக்கும் லாபம் வழக்கமான பிபிஎப் மற்றும் இபிஎப் ஐ விட அதிகம். ஒரு நாளைக்கு ரூ .50 சேமித்து என்பிஎஸ்-ல் முதலீடு செய்ய தொடங்குங்கள்.
தினமும் ரூ. 50 என்றால் மாதம் நீங்கள் செய்யும் முதலீடு ரூ .1,500. தொடர்ந்து 35 ஆண்டுகள் முதலீடு செய்தால், 10% விகிதத்தில் உங்கள் மொத்த ஓய்வூதி தொகையாக ரூ .34 லட்சமாக கிடைக்கும். அதாவது நீங்கள் செய்யும் முதலீடு ரூ. 6.30 லட்சம் தான் ஆனால் உங்களுக்கு வழங்கப்படும் வட்டி மட்டுமே 27.9 லட்சம் ஆகும். 25 வயதில் நீங்கள் சேமிக்க தொடங்க வேண்டும். அதே போல் உங்களால் மொத்த பணத்தை ஒரே நேரத்தில் எடுக்க முடியாது. 60 சதவிகிதத்தை மட்டுமே திரும்பப் பெற முடியும் மற்றும் மீதமுள்ள 40 சதவிகிதம் நீங்கள் வருடாந்திரத் திட்டத்தில் வைக்க வேண்டும், அதில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் கிடைக்கும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.