• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஆண்டுக்கு ரூ. 12 போதும்... நீங்கள் 2 லட்சத்திற்கு தகுதி பெறுவீர்கள்! அப்படி ஒரு ஸ்கீம் இருக்கு

ஆண்டுக்கு ரூ. 12 போதும்... நீங்கள் 2 லட்சத்திற்கு தகுதி பெறுவீர்கள்! அப்படி ஒரு ஸ்கீம் இருக்கு

ரூ. 12 க்கு சூப்பரான திட்டம்

ரூ. 12 க்கு சூப்பரான திட்டம்

வங்கி மூலம் அல்லது அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு மூலம் மட்டுமே எடுக்க முடியும்.

  • Share this:
    ஆண்டுக்கு ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சம் வரை பயன்களை பெறுவதற்கான காப்பீட்டுத் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    சேமிப்பு இன்றைய சூழ்நிலையில் நாம் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்று. கொரோனா அலையைப் பார்த்த பின்பு மனிதனின் வாழ்க்கை நிச்சயம் இல்லாமல் போனது உறுதியானது. கண்டிப்பாக நம்முடைய சேமிப்பு நம்மைக் காட்டிலும் நம் குடும்ப உறுப்பினர்களுக்கு கண்டிபாக உதவும். அதிலும் குறிப்பாக காப்பீடு திட்டங்கள் மிகவும் அவசியமானவை. ஆனால் சில நடுத்தர குடும்பத்தினர் காப்பீட்டு திட்டம் என்றால் மாதம் அதிக தொகை கட்ட வேண்டி வரும். மொத்தமாக 5 லட்சம் மற்றும் 10 லட்சத்திற்கு தான் காப்பீடு செய்ய முடியும் என்ன தவறுதலாக நினைத்து உள்ளனர்.அப்படியில்லை நடுத்தர குடும்பத்தினர் வருடத்திற்கு ரூ. 12 சேமித்தாலே ரூ. 2 லட்சம் வரையிலான காப்பீடு திட்டங்களுக்கு தகுதி பெறுவார்கள் தெரியுமா?

    பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா. இந்த திட்டம் குறித்து இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் இங்கே படியுங்கள். இது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். இதில் 2 வகையான காப்பீடு திட்டங்கள் உள்ளன. விபத்து காப்பீட்டிற்க்காக ஆண்டுக்கு 12 ரூபாயும் ஆயுள் காப்பீட்டிற்க்காக ஆண்டுக்கு 330 ரூபாயும் ஒருவரிடமிருந்து கட்டணமாக வசூலிக்கப்படும்.இரண்டிற்க்கும் தனித்தனியாக இரண்டு லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை. மொத்தம் 4 லட்சம் மதிப்பிலான இந்த 2 காப்பீடு திட்டத்திலும் ஒருவர் சேரலாம். அல்லது இரண்டில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

    ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் வங்கி வழியாகவே சேர முடியும். ஒருமுறை ஃபார்மை நிரப்பி இந்த திட்டத்தில் சேர்ந்து விட்டால் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் தானாகவே கழித்துக் கொள்ளப்படும்.

    ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.75% வட்டி.. இதனால் தான் இந்த பேங்க பெஸ்ட்டுன்னு சொல்றாங்க!

    விபத்து காப்பீட்டில் 18 வயது முதல் 70 வயது, ஆயுள் காப்பீட்டில் 18 வயது முதல் 50 வயதுவரை தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதிர்வு தொகை என்று எதுவும் வழங்கப்பட மாட்டாது. அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். விபத்து காப்பீட்டில் சாலை விபத்து ஏற்பட்டு இறந்தால் பணம் கொடுக்கப்படும்.
    ஆயுள் காப்பீடும் அப்படி தான். இறந்த பிறகு நாமினியிடம் பணம் கொடுக்கப்படும். சேமிப்பு, முதலீடு என்பது வெறும் பணத்தை சேர்ப்பது மட்டுமில்லை இதுப்போன்ற காப்பீடு திட்டங்களும் சேமிப்பு தான். அதிலும் இவை அவசியமான சேமிப்புகள் என்பதை மறந்து விடாதீர்கள்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: