ஹோம் /நியூஸ் /வணிகம் /

மிடில் கிளாஸ் மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 4 சேமிப்பு திட்டங்கள்!

மிடில் கிளாஸ் மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 4 சேமிப்பு திட்டங்கள்!

சேமிப்பு திட்டங்கள்

சேமிப்பு திட்டங்கள்

வயதானவர்களுக்கு ஏற்ற மிகவும் பிரபலமான வரி சேமிப்பு முதலீடுகளில் ஒன்று மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமாகும்

    2022-23ம் நிதியாண்டில் கூடிய விரைவில் வரி-சேமிப்பு முதலீடுகளைச் செய்வதன் மூலம், உங்கள் வரி இல்லாத வருமானத்திற்காக அதிகமாக சேமிக்க முடியும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் முதலீடு செய்வது தனிநபர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFs) ஆகியோருக்கு ஒரு நிதியாண்டில் வரியைச் சேமிக்க மிகவும் பிரபலமான வழியாகும். ஏனெனில் ஒரு தனிநபர் அதிகபட்சமாக ரூ.150,000-த்தை ஒரு ஆண்டுக்கு பெற முடியும்.

    ஆனால் நீங்கள் நீண்ட காலம் முதலீடு செய்திருந்தால் மட்டுமே சந்தை அடிப்படையிலான வருமானத்தை அடைய முடியும். இதன் விளைவாக, நிலையான வருமானம் அல்லது வரிச் சேமிப்பு முதலீடுகளிலிருந்து வருமானம் தேடும் முதலீட்டாளர்கள் வங்கியில் ஃபிக்ஸ்டு டெபாசிட், பி.பி.எஃப் மற்றும் பிற நிதித் திட்டங்களை கருத்தில் கொள்ளலாம். 2022-23 நிதியாண்டில், பழைய வரி விதியின் கீழ் உள்ள வரிச் சேமிப்பாளர்கள், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சத்துக்குப் பிடித்தம் செய்யலாம், மேலும் 30% அதிகபட்ச வரி அடுக்கில் உள்ள ஒருவர், 4% உட்பட ரூ.46,800 வரியைச் சேமிக்கலாம். நடப்பு நிதியாண்டிற்கான பிரிவு 90C இன் கீழ் வரிகளில் பணத்தைச் சேமிக்கப் பயன்படுத்தக்கூடிய ஆபத்து இல்லாத முதலீட்டாளர்களுக்கான நான்கு நிலையான வருமான திட்டங்கள் பற்றி இனி பார்க்கலாம்.

    இதையும் படிங்க.. வங்கி அல்லாத பாரத் பில் பேமெண்ட் யூனிட்களுக்கான நிகர மதிப்பு தேவையை குறைப்பதாக ஆர்பிஐ அறிவிப்பு!

    சுகன்யா சம்ரித்தி கணக்கு :

    தபால் நிலையத்தில் இந்த சிறுசேமிப்புத் திட்டத்தை பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் தொடங்கலாம். ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் வரை இந்த கணக்கை திறக்கலாம். குறைந்தபட்ச வைப்புத் தொகையான ரூ.250 உடன் கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.6% ஆக உள்ளது. அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை சேமிப்பை தொடங்கலாம்.

    இந்த திட்டத்திற்கு 80சி பிரிவின் கீழ் டெபாசிட் முறை விலக்கு பெற முடியும். எனவே உருவாக்கப்படும் வட்டிக்கு வரி இல்லை. கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது 18 வயதுக்கு பின் அந்த பெண் குழந்தையின் திருமணத்திற்காக ஒருவர் அந்த கணக்கை முதிர்ச்சி பெற கோரலாம். ஒரு பெண் குழந்தை 18 வயதை அடைந்த பிறகு அல்லது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, முந்தைய நிதியாண்டின் முடிவில் கிடைக்கும் தொகையில் 50% வரை எடுக்கலாம். மேலும் அவசர காலங்களில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முன்கூட்டியே மூடலாம்.

    பொது வருங்கால வைப்பு நிதி (PPF) :

    பிபிஎஃப் என்பது மிகவும் பிரபலமான வரி-சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது வருடத்திற்கு 7.1 சதவீதம் செலுத்துவது மட்டுமல்லாமல், வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு விலக்கு அளிக்க அனுமதிக்கிறது. குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ. 500 என்பதும், அதிகபட்ச வைப்புத் தொகையாக ரூ.1,50,000 என்பதும் உள்ளது. கணக்கு வைத்திருப்பவர் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஒருமுறை திரும்பப் பெறலாம், கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டைத் தவிர்த்துவிட்டு, நான்காவது முந்தைய ஆண்டின் இறுதியில் அல்லது அதற்கு முந்தைய ஆண்டின் இறுதியில் மொத்த இருப்பில் 50% வரை பணம் எடுக்கலாம்.

    SBI : கல்லூரியில் படிக்க ரூ. 50 லட்சம் வரை லோன் தரும் ஸ்டேட் பேங்க்! அப்ளை செய்யும் முறை

    முதிர்ச்சியடைந்தவுடன், முதிர்வுத் தொகையைப் பெறுதல், மேலும் டெபாசிட் செய்யாமல் முதிர்வுத் தொகையை தனது கணக்கில் வைத்திருப்பது, தனது கணக்கை மற்றொரு ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பது போன்ற வழிகளையும் பயன்படுத்தி கொள்ளலாம். கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டின் முடிவில் இருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவர் முன்கூட்டியே திரும்பப் பெறலாம். ஒருவேளை கணக்கு வைத்திருப்பவருக்கு மரணம் ஏற்பட்டால், கணக்கு மூடப்பட்டு, அவரது நாமினிகளிடம் ஒப்படைக்கப்படும்.

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS):

    வயதானவர்களுக்கு ஏற்ற மிகவும் பிரபலமான வரி சேமிப்பு முதலீடுகளில் ஒன்று மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமாகும்(SCSS). 60 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இதில் கணக்கை தொடங்கலாம், மேலும் இது அவர்களின் சொந்த பெயரில் அல்லது அவர்களின் மனைவியுடன் கூட்டாக திறந்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்சமாக ரூ.1000 தொகையுடனும், அதிகபட்ச வரம்பாக ரூ. 15 லட்சத்துடன் தொடங்கலாம், அதன் பிறகு ஒரு சந்தாதாரர் ஒரு வருடத்திற்கு 7.4 சதவீத வருமானத்தைப் பெறலாம்.

    ஒரு நிதியாண்டில் அனைத்து SCSS கணக்கு வைத்திருப்போரின் மொத்த வட்டியானது ரூ.50,000-தை தாண்டினால் வட்டிக்கு வரி விதிக்கப்படும். மேலும் SCSS திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் மொத்த வட்டியில் இருந்து டி.டி.எஸ் கழிக்கப்படும். கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு இது முதிர்ச்சியடையும். முதிர்ச்சியடைந்த ஒரு வருடத்திற்குள், கணக்கு வைத்திருப்பவர் கணக்கை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.

    5 வருட ஃபிக்ஸ்டு டெபாசிட் :

    ஃபிக்ஸ்டு டெபாசிட் திட்டம் என்பது மிகவும் பிரபலமான ஆபத்து இல்லாத முதலீடுகளில் ஒன்றாகும். மேலும் வட்டி விகிதங்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், வங்கியின் ஃபிக்ஸ்டு டெபாசிட் திட்டம் இன்னும் பிரகாசமாக உள்ளன. வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் 5 வருட லாக்-இன் காலத்தைக் கொண்டிருக்கின்றன. மேலும் இதில் குறைந்தபட்சமாக ரூ.100-யையும், அதிகபட்ச டெபாசிட் வரம்பாக ₹1.5 லட்சத்தையும் கொண்டுள்ளீர்கள். இது தனிநபர்கள் பிரிவு 80C வரிச் சலுகைகளைப் பெற அனுமதிக்கிறது.

    இந்த கணக்கை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ மட்டுமே தொடங்க முடியும், மேலும் 80c இன் கீழ் வரிச் சலுகையானது கூட்டு வைப்புத்தொகையின் போது முதல் அல்லது முதன்மை வைத்திருப்பவருக்கு மட்டுமே வழங்கப்படும். இதில் மாதாந்திர, காலாண்டு அல்லது வரி-சேமிப்பு ஃபிக்ஸ்டு டெபாசிட்களில் முதன்மை மறு முதலீடு ஆகியவை அடங்கும். ஒரு நிதியாண்டில் ஃபிக்ஸ்டு டெபாசிட்க்கு செலுத்த வேண்டிய வட்டி என்பது ரூ.40,000/-ஐ (மூத்த நபர்களுக்கு ரூ. 50,000/-) தாண்டினால், 10% டி.டி.எஸ் கழிக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Fixed Deposit, Savings