• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சேமிப்பு திட்டங்கள்! முழு விபரம்

பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சேமிப்பு திட்டங்கள்! முழு விபரம்

சேமிப்பு திட்டங்கள்

சேமிப்பு திட்டங்கள்

ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியின் 80சி பிரிவில் கீழ் வரிச் சலுகை பெற முடியும்

  • Share this:
    குழந்தைகளின் கல்வி செலவு, எதிர்கால செலவை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் சேமிக்கும் திட்டங்கள் போஸ்ட் ஆபீஸில் ஏராளம். அந்த வகையில் இன்று ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்களை பற்றி பார்க்கலாம்.

    ஆண் குழந்தைகளுக்கு சேமிப்பு திட்டங்களை பற்றி பலருக்கும் தெரிவதில்லை. மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் பல சலுகைகள் உண்டும். அதில் முக்கியமான ஒன்று முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொள்ளும் வசதி.இந்திய அஞ்சல் துறையில் செயல்படும் இந்த திட்டத்தில். ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இத்திட்டத்துக்கான வட்டி 8.1 சதவீதம் என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் வட்டி விகிதம் மாறும் என்று கூறப்படுகிறது. எனவே நடைமுறையில் உள்ள வட்டி விகிதம் குறித்து தபால் நிலையத்தில் அல்லது இந்தியா போஸ்ட் வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம்.

    அடுத்தது, பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் (பிபிஎப்) கணக்கு. இந்த பிபிஎஃப் கணக்கின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. மேலும், இந்த முதலீட்டுக்கான வட்டிக்கு வரி செலுத்தத் தேவையில்லை. ஒரு பிபிஎஃப் கணக்கை அஞ்சலகம், ஐசிஐசிஐ அல்லது எஸ்பிஐ போன்ற வங்கிகளில் தொடங்கலாம்.

    15 ஆண்டுகள் கொண்ட இந்தத் திட்டம் மூலம் குழந்தைகளின் கல்விக்கு ஏற்ற ஒரு தொகுப்பை பெற்றோர்களால் உருவாக்கித் தர முடியும். இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7.9 சதவீதம் ஆகும். அது மட்டுமல்ல, ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியின் 80சி பிரிவில் கீழ் வரிச் சலுகை பெற முடியும். குழந்தைகள் கல்வியைக் கட்டமைக்க இது சிறந்த வழியாக இருக்கும். நீண்ட நாள் திட்டம் என்பது மட்டுமே தயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், கல்வி கட்டமைப்புக்கு பெரும் உதவியாக இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: