• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ரூ. 34 சேமித்து போஸ்ட் ஆபீஸில் லட்சாதிபதி ஆகலாம் தெரியுமா? ஆச்சரியம் தரும் திட்டத்தின் முழு விபரம்!

ரூ. 34 சேமித்து போஸ்ட் ஆபீஸில் லட்சாதிபதி ஆகலாம் தெரியுமா? ஆச்சரியம் தரும் திட்டத்தின் முழு விபரம்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ் பிபிஎப் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் நீங்கள் ரூ.5.32 லட்சம் பெற முடியும்

  • Share this:
    நல்ல வட்டி.. நல்ல வருமானம்.. பணத்திற்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து தான் பார்க்க போகிறோம்.

    பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான மிகச் சிறந்த வழியாக உள்ளது. இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், வரி விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் உள்ளன. ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகையைச் சேமித்து நீண்ட கால அடிப்படையில் மிகப் பெரிய லாபத்தை ஈட்ட பிஎஃப் சேமிப்பு உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம், இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி தொகை தான். இந்த திட்டத்துக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

    இதில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஒரே தவணையில் 1.50 லட்சம் செலுத்த முடியாவிட்டால் மாதம் 12500 ரூபாய் செலுத்தலாம்.அட மாதம் 12,500 ஐ விடுங்க. உங்கள் செலவில் தினமும் ரூ. 34 சேமித்தால் கூட போதும் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய தகுதியானவர் தான். இந்த திட்டம் நீண்டகாலம் பணத்தை சேமிக்க நினைப்போருக்கு சிறந்த திட்டமாகும். பிபிஎப் திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள் ஆகும். தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு 5 ஆண்டுகளாக நீட்டித்துக்கொள்ளலாம்.

    அதாவது நீங்கள் தினமும் ரு. 34 சேமித்தாலே போதும். மாதத்துக்கு 1,054 ரூபாய் . இந்த தொகையை அப்படியே போஸ்ட் ஆபீஸில் இருக்கும் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும், 15 ஆண்டுகளுக்கு நீங்கள் சேமிக்கும் தொகை ரூ.1.80 லட்சம். அதற்கு வட்டியாக ரூ.1.45 லட்சம் சேர்த்து உங்களுக்கு மொத்தம் ரூ.3.25 லட்சம் கிடைக்கும். திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் நீங்கள் ரூ.5.32 லட்சம் பெற முடியும். கம்மியான தொகையில் முதலீட்டை நீட்டித்து பெரிய தொகையை ஈட்ட முடியும். இதுதான் இந்த திட்டத்தின் சிறப்பம்சம்.

    credit card பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு... இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்!

    அதே போல் இந்த திட்டத்தில் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறோமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்கினால் திட்டத்தின் முதிர்வு காலத்தில் பெரிய தொகையை ஈட்ட முடியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: