• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • உங்களிடம் ரூ. 10,000 இருந்தால் அதை ரூ. 16 லட்சமாக மாற்றலாம் தெரியுமா?

உங்களிடம் ரூ. 10,000 இருந்தால் அதை ரூ. 16 லட்சமாக மாற்றலாம் தெரியுமா?

போஸ்ட் ஆஃபிஸ் திட்டங்கள்

போஸ்ட் ஆஃபிஸ் திட்டங்கள்

மாதம் மாதம் முதலீடு செய்த தொகைக்கு 5.8% வட்டி வழங்கப்பட்டு உங்களுக்கு ரூ. 16 லட்சமாக திரும்பி தரப்படுகிறது.

  • Share this:
    ரூ. 10,000 உங்களிடம் இருந்தால் அதை ரூ.16 லட்சமாக மாற்ற நீங்கள் செல்ல வேண்டிய இடம் அஞ்சல் அலுவலகம் தான்.

    நல்ல முதலீடு கணக்கை மட்டும் கண்டுப்பிடித்துவிட்டால் போதும் பணம் தானாகவே சேர்ந்துவிடும். அதிலும் பாதுகாப்பான, அரசு உத்தரவாதம் கிடைக்கும் முதலீடு திட்டங்கள் என்றால் தயக்கமே வேண்டாம் உடனே திட்டமிட தொடங்கிவிடுங்கள். அப்படி முதலீடு செய்ய திட்டம் இருக்கு என்பவர்கள் போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் போஸ்ட் ஆஃபீஸ் ரெக்குரிங் டெபாசிட் திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தில் குறைந்த அளவு முதலீடு செய்து லாபத்தை அள்ளலாம். நல்ல வட்டியும் கிடைக்கும்.

    இந்த திட்டத்திற்கு அரசு உத்தரவாதம் வழங்குகிறது. இந்த திட்டத்தில் ரூ. 100 செலுத்தி கூட முதலீட்டினை துவங்க முடியும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் எவ்வளவு தொகை வேண்டுமென்றாலும் முதலீடு செய்யலாம். உச்ச வரம்பு முதலீட்டு அளவு என்பது இந்த திட்டத்தில் இல்லை. 5 ஆண்டுகள் முதல் ரெக்குரிங் கணக்குகளை தொடங்கலாம். வங்கிகளில் ரெக்குரிங் கணக்குகளை 6 மாதம், ஒரு வருடம், 2 வருடங்கள் மற்றும் மூன்று வருடங்கள் வரை மட்டும் கூட தொடங்கலாம் ஆனால் போஸ்ட் ஆஃபீஸில் அப்படியில்லை. அதே சமயம் நல்ல வட்டியும் இங்கு கிடைக்கும். ஒவ்வொரு காலாண்டிலும் வருடாந்திர விகிதத்தில் வட்டி கணக்கிடப்படும். ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் உங்களின் கணக்கில் அந்த பணம் சேமிக்கப்படும்.

    தற்போது இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி மற்றும் பிற விவரங்களை பற்றி பார்க்கலாம். வட்டி விகிதம் தற்சமயம் 5.8% ஆக உள்ளது. இந்த வட்டி விகிதம் மத்திய அரசால் மட்டும் நிர்ணியிக்கப்படுகிறது. இப்போது நீங்கள் மாதம் ரூ. 10,000 முதலீடு செய்ய திட்டமிட்டால் 10 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு திரும்ப கிடைக்கும் தொகை ரூ. 16லட்சம் ஆகும். நீங்கள் மாதம் மாதம் முதலீடு செய்த தொகைக்கு 5.8% வட்டி வழங்கப்பட்டு உங்களுக்கு ரூ. 16 லட்சமாக திரும்பி தரப்படுகிறது.

    முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த ரெக்குரிங் டெபாசிட் திட்டம் முறை ஒரு நல்ல தேர்வாகும். அதுமட்டுமில்லை அரசு உத்தரவாததுடன் பணத்திற்கு முழு பாதுகாப்பும் தரப்படுகிறது. இதைவிட வேற என்ன வேண்டும்?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: