• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • உங்களுக்கு ஆண் - பெண் குழந்தைகள் இருந்தால் போஸ்ட் ஆபீஸ் சென்று இதை செய்திடுங்கள்!

உங்களுக்கு ஆண் - பெண் குழந்தைகள் இருந்தால் போஸ்ட் ஆபீஸ் சென்று இதை செய்திடுங்கள்!

போஸ்ட் ஆபிஸ்

போஸ்ட் ஆபிஸ்

குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தைத் தொடங்கலாம். அவர்களின் எதிர்காலம் செழிப்பாகும்.

  • Share this:
    sவீட்டில் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளை உடைய பெற்றோர்கள் பிள்ளைகளின் வருங்காலத்திற்கு முதலில் செய்ய வேண்டியது இது தான்.

    ஆண் பிள்ளைகளுக்காக அஞ்சல அலுவலகத்தில் உருவாக்கப்பட்டது செல்வ மகன் சேமிப்பு திட்டம். எப்படி ஒரு குழந்தைக்கு நல்ல கல்வி, நல்ல சூழல், நல்ல உணவு முக்கியமோ அதைப்போல தான் அவர்களின் வருங்காலத்திற்காக நீங்கள் சேமிக்கும் பணமும்.
    கூடுதல் வட்டி மட்டுமின்றி உயர்கல்விக்கு கணிசமான தொகை கிடைக்க கண்டிப்பாக இந்த திட்டம் உதவும். எதிர்பாராத இழப்புக்குப் பின்னரும் குழந்தையின் கல்வி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு அவர்களின் சிறுவயதிலே இதுப்போன்ற சேமிப்பு திட்டங்களை தொடங்கி வைப்பது நல்லது.இந்த பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் சிறப்பே முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.

    ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு 8.1% வட்டி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது . 10 வயதுக்கு கீழ் உள்ள ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் மூலமாக கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தானாகவே கணக்கு துவங்கலாம். இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கும் உண்டு.

    பெண் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டது சுகன்யா சம்ரிதி திட்டம். இதில்குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலிடு செய்யலாம்.கணக்கைத் திறக்க, நீங்கள் வைப்புத் தொகையையும் செலுத்த வேண்டும். நீங்கள் ரூ .250 முதல் 1.50 லட்சம் வரை எந்த தொகையையும் செலுத்தலாம்.அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தைத் தொடங்கலாம்.

    மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

    இருமடங்கு லாபம் தரும் திட்டங்கள்... முதலீடு செய்ய நீங்க ரெடியா?

    இந்த சேமிப்புத் திட்டத்தை 14 ஆண்டுகள் வரை மட்டுமே தொடர முடியும். எனவே ஓராண்டிற்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 14 ஆண்டுகள் முடிவில் ரூ.14 லட்சம் ஆகிறது. 21 ஆண்டுகளுக்குப் பின், வட்டி சேர்க்கப்பட்டு ரூ.46 லட்சமாக திரும்பக் கிடைக்கிறது. இதேபோல் ஆண்டிற்கு ரூ.50,000 என 14 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், இறுதியாக ரூ.23 லட்சமாக உங்கள் மகளின் பெயரில் இருக்கும்.இந்த திட்டத்தின் பயனை அறிந்தவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அஞ்சலகம் சென்று இந்த திட்டத்தை தொடங்குங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: