ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஆண் குழந்தைகளுக்காக எப்படி சேமிக்கலாம்? எங்கு சேமிக்கலாம்? எதில் வட்டி அதிகம்! முழு விபரம்

ஆண் குழந்தைகளுக்காக எப்படி சேமிக்கலாம்? எங்கு சேமிக்கலாம்? எதில் வட்டி அதிகம்! முழு விபரம்

மாநகராட்சி கடன்

மாநகராட்சி கடன்

குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பெண் குழந்தைகளுக்கு போலவே ஆண் குழந்தைகளுக்கும் பொன்மகன் சேமிப்பு திட்டத்தை அஞ்சல்துறை செயல்படுத்துகிறது.

  குழந்தை பிறந்ததுமே அவர்களின் எதிர்காலத்தை குறித்து திட்டமிடும் பெற்றோரா நீங்கள்? இதோ இந்த பதிவு கண்டிப்பாக உங்களுக்கு உதவும். ஏனெனில் இந்த காலகட்டத்தில் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதில் தொடங்கி படிப்பு முடிகின்ற வரையிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். இதற்கு சேமிப்பு மட்டுமே போதாது. அதையும் தாண்டி பலன் தரும் சில திட்டங்கள் இருக்கின்றன.இந்த பதிவில் நாம் பார்க்க போவது ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம். ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டத்தை அஞ்சல்துறை செயல்படுத்துகிறது. கூடுதல் வட்டி மட்டுமின்றி உயர்கல்விக்கு கணிசமான தொகை கிடைக்க உதவும்.

  பெண் குழந்தைகள் போன்றே ஆண் குழந்தைக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள “பொன்மகன் சேமிப்பு திட்டம்” மூலமாக வைப்பு முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.

  இத்திட்டத்துக்கான வட்டி 8.1 சதவீதம் என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் வட்டி விகிதம் மாறும் என்று கூறப்படுகிறது. எனவே நடைமுறையில் உள்ள வட்டி விகிதம் குறித்து தபால் நிலையத்தில் அல்லது இந்தியா போஸ்ட் வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம். இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது என்கிறார்கள். அடுத்ததாக நாம் பார்க்க போவது, பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் (பிபிஎப்) கணக்கு. இந்த பிபிஎஃப் கணக்கின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு.

  மேலும், இந்த முதலீட்டுக்கான வட்டிக்கு வரி செலுத்தத் தேவையில்லை. ஒரு பிபிஎஃப் கணக்கை அஞ்சலகம், ஐசிஐசிஐ அல்லது எஸ்பிஐ போன்ற வங்கிகளில் தொடங்கலாம். ஆன்லைன் மூலம் இந்த கணக்கைத் தொடங்க வேண்டும் என்றால் அதை ஐசிஐசி வங்கியில் தொடங்கலாம்.15 ஆண்டுகள் கொண்ட இந்தத் திட்டம் மூலம் குழந்தைகளின் கல்விக்கு ஏற்ற ஒரு தொகுப்பை பெற்றோர்களால் உருவாக்கித் தர முடியும். இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7.9 சதவீதம் ஆகும். வங்கிகளில் வழங்கப்படும் 7 சதவீத வட்டி விகிதங்களில் இருந்து மிகத் தொலைவில் இருக்கிறது. இதில் கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரி விலக்கு உண்டு. அது மட்டுமல்ல, ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியின் 80சி பிரிவில் கீழ் வரிச் சலுகை பெற முடியும். முதலீடுக்கு ஏற்ற கவர்ச்சிகரமான திட்டம் இது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Savings