Home /News /business /

முதலீடுக்கு வட்டி கூடவே வருமான வரியும் சேமிக்கலாம்.. இந்த திட்டத்தில் சேர இனியும் லேட் பண்ணாதீங்க!

முதலீடுக்கு வட்டி கூடவே வருமான வரியும் சேமிக்கலாம்.. இந்த திட்டத்தில் சேர இனியும் லேட் பண்ணாதீங்க!

முதலீடு திட்டம்

முதலீடு திட்டம்

savings NSC : வருமான வரி விலக்கு பெற உதவும் முதலீட்டு / சேமிப்புத் திட்டங்கள் வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    தனிநபர் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதே போல, குறிப்பிட்ட வரம்பை மீறும் போது, உரிய தொகையை வரியாக செலுத்த வேண்டும். வருமான வரியைக் குறைப்பதற்கான பல்வேறு சேமிப்புகள் மற்றும் முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இது வரியை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் பணம் சேமிக்கவும் உதவுகிறது. வருமான வரி விலக்கு பெற உதவும் முதலீட்டு / சேமிப்புத் திட்டங்கள் வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. காப்பீடு, வைப்புத் தொகை, உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதில், நீண்ட கால முதலீட்டுத் திட்டமாக இரண்டு திட்டங்கள் முதல் இடங்களில் உள்ளன.

    NSC – நேஷனல் சேவிங்க்ஸ் சர்ட்டிஃபிகேட்

    ELSS – ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் ஸ்கீம்

    பெரும்பான்மை முதலீட்டாளர்கள், தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) மற்றும் ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS) ஆகியவற்றின் இடையே எந்த திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று குழப்பமடைந்துள்ளனர்.

    தேசிய சேமிப்புச் சான்றிதழ், ஆண்டுக்கு 6.80 சதவீதம் நிலையான வட்டி வழங்குகிறது. இது குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கான சேமிப்புத் திட்டமாகும். இதில் எந்த விதமான ஆபத்தும் இல்லை.

    5 ஆண்டுகளுக்கும் மேலாக, 10 ஆண்டுகள் வரை பணத்தை முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு, ELSS சரியானத் தேர்வாக இருக்கும். இவை ஈக்விட்டி ஃபண்டுகள், என்பதால் குறுகிய காலத்திற்கு மட்டுமே ஆபத்தானவையாக இருக்கும். இருப்பினும், NSC உடன் ஒப்பிடும் போது, ELSS முதலீடு நீண்ட காலத்திற்கு பாதுகாப்பான முதலீடாக இருக்கும்.

    இதையும் படிங்க.. PM-KISAN :விவசாயிகளுக்கு 11வது தவணை இந்த நாளில் கிடைக்கும்!

    NSC சேமிப்பின் லாக்-இன் காலம் 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் ஆகும். நீங்கள் விரும்பும் கால அளவைத் தேர்வு செய்யலாம். ELSS சேமிப்பின் லாக்-இன் காலம் 3 ஆண்டுகள். ELSS என்பது ஈக்விட்டி ஃபண்டுகள் என்பதால், நீங்கள் இதில் சேமிக்கும் தொகை 3 வருடங்களில் பெரிய தொகையை வருமானமாகத் தரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, நீங்கள் குறைந்த கால வருமானம் வேண்டாம் என்று விரும்பினால் ELSS இல் முதலீடு செய்வது நீண்ட காலத்திற்கு நன்மையாக இருக்கும். சில ELSS திட்டங்கள் 25 முதல் 30 சதவீதம் வரை வருமானத்தை வழங்குகின்றன. இது NSC வழங்கும் வருமானத்தை விட அதிகம்.

    இதையும் படிங்க.. 45 வயதில் Home Loan பெற முயற்சி செய்கிறீர்களா? இதைச் செய்தால் சக்சஸ் ஆகும்

    உங்களுக்கு நீண்ட கால சேமிப்பு வேண்டாம், 7 ஆண்டுகளுக்கும் குறைவாக இருக்கும் சேமிப்பு போதும் என்று நினைத்தால், 80 சி வரி விலக்கு பிரிவின் கீழ், நீங்கள் NSC அல்லது வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank accounts, Post Office, Savings

    அடுத்த செய்தி