Home /News /business /

தினமும் ரூ. 50 சேமித்தால் போதும்.. அஞ்சலக சேமிப்பில் கிடைக்கும் இத்தனை சலுகைகளையும் நீங்கள் பெறலாம்!

தினமும் ரூ. 50 சேமித்தால் போதும்.. அஞ்சலக சேமிப்பில் கிடைக்கும் இத்தனை சலுகைகளையும் நீங்கள் பெறலாம்!

அஞ்சலக சேமிப்பு

அஞ்சலக சேமிப்பு

அஞ்சலக சேமிப்பில் அதற்கேற்ப பல திட்டங்கள் உள்ளன. அதுக் குறித்து பார்க்கலாம் வாங்க.

    அஞ்சலக சேமிப்பில் குறைந்தபட்ச தொகை கொண்ட சேமிப்பை தொடங்குவது எப்படி? அதன் மூலம் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன? இதுக்குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்

    சேமிப்பு என்பது கட்டாயம் ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டிய ஒன்று. இன்றைய சேமிப்பு நாளைய வருவாய் என்பார்கள். எனவே, சம்பாதிக்கும் காலத்திலே குறைந்த தொகை முதல் அதிகப்பட்ச தொகை வரை அவரவர்களின் தேவைக்கு ஏற்ப எதாவது ஒரு சேமிப்பை தொடங்கிட வேண்டும். பிக்சட் டெபாசிட் போன்ற பல்வேறு முதலீடு திட்டங்களில் பெரிய முதலீடு இருந்தால் தான் சேமிக்க முடியும், மிடில் கிளாஸ் மக்கள், தினக்கூலிகள் இதில் முதலீடு செய்வது கஷ்டம் போன்ற பிம்பம் இன்னும் உள்ளது. ஆனால் அது உண்மை இல்லை.  குறைந்த முதலீடு மூலம் கூட நீங்கள் சேமிப்பை தொடங்க முடியும் தெரியுமா? போஸ்ட் ஆபீஸில் அதற்கேற்ப பல திட்டங்கள் உள்ளன. அதுக் குறித்து பார்க்கலாம் வாங்க.

    சுகன்யா சம்ரிதி யோஜனா :

    பெண் குழந்தைகளுக்காக சூப்பரான சேமிப்பு திட்டம். மத்திய அரசு, மாநில அரசு இந்த திட்டங்களில் பெண் குழந்தைகளுக்காக பெற்றோர்களை சேமிக்க அறிவுருத்தி வருகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள். எனினும் 18 வயதிற்கு மேல் திருமணம் ஆனாலும், அந்த கணக்கு தானாகவே மூடப்படும். இதற்கான வட்டி விகிதம் தற்போதைய நிலவரப்படி 7.6% ஆகும்.
    இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரையில் செலுத்திக் கொள்ளலாம். மாதம் ரூ. 250 என்பது மிக மிக குறைவான தொகை. குறைந்தப்பட்சம் தினமும் ரூ. 50 சேமித்தால் கூட போதும் உங்கள் குழந்தைகளுக்காக ஒரு நல்ல திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

    இதையும் படிங்க.. பிரபல வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்கியவர்கள் கவனத்திற்கு! வட்டியில் முக்கிய மாற்றம்

    இந்த திட்டத்தில் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

    பொது வருங்கால வைப்பு நிதி :

    இந்த திட்டத்தில் தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாயாகும். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். மாதம் ரூ. 500 சேமிக்க கஷ்டம் என்றால் தினமும் ரூ. 20 முதல் ரூ. 30 வரை சேமித்தாலே போது ரூ. 500 என்பதை ஈஸியாக செலுத்தலாம். இந்த திட்டத்தில் வருமான வரி பிரிவு 80-சியின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில், வரி விலக்கு உண்டு. அதேபோல பிபிஎஃப் திட்டத்தின் மூலம் முதிர்வு தொகைக்கும் வரி விலக்கு உண்டு.

    இதையும் படிங்க. EPFO : உங்கள் பிஎஃப் கணக்கில் புதிய பேங்க் அக்கவுண்ட்டை சேர்க்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!


    தொடர் வைப்பு நிதி திட்டம்:

    இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 5.8% ஆகும். இந்த திட்டத்தில் வருடத்தில் 4 முறை, அதாவது காலாண்டுக்கு ஒரு முறை வட்டி கிடைக்கும். தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்ச 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். அதே போல் 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள், இந்த கணக்கினை பாதுகாவலர் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.

    இப்படி குறைந்த தொகையில் முதலீடு செய்யக்கூடிய பல திட்டங்கள் அஞ்சலகத்தில் செயல்பாட்டில் உள்ளன. அதுக் குறித்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Money control, Post Office, Savings

    அடுத்த செய்தி