ஹோம் /நியூஸ் /வணிகம் /

பணத்தை பெருக்க நினைப்பவர்கள் போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டத்தை தொடங்கினால் நல்லது!

பணத்தை பெருக்க நினைப்பவர்கள் போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டத்தை தொடங்கினால் நல்லது!

இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

savings : நீங்கள் மொத்த தொகையையும் செலுத்தி விடுவதால் தீர்மானிக்கப்பட்ட வட்டியை பெறுவீர்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சேமிப்பு என்றவுடன் அனைவருக்கும் தோன்றும் முதல் கேள்வி, எதில் சேமிப்பது. வங்கியில் போடலாமா? போஸ்ட் ஆபீஸில் சேமிக்கலாமா? அல்லது பிக்சட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாமா? என பல கேள்விகள் தோன்றும். அந்த கேள்விக்கான விடையை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பிக்சட் டெபாசிட் திட்டம் மற்றும் ரெக்கரிங்க் டெபாசிட் திட்டம் இந்த 2 சேமிப்பு திட்டங்கள் பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது.இந்த இரண்டில் ஏதேனும் ஒரு திட்டத்தில் நீங்கள் உங்கள் சேமிப்பை தொடங்க் முடிவு செய்தால் அதற்கு முன்பு இவை இரண்டிருக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மற்றும் நன்மைகள் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். முதல் முறை முதலீட்டு முயற்சியில் இறங்குபவர்கள் குழப்பம் இல்லாமல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்வது நல்லது.

FD அல்லது RD திட்டத்தில் முதலீடு செய்யும் முன், குறிப்பிட்ட திட்டத்தில் கிடைக்கும் வட்டி விகிதம் மற்றும் முதலீட்டு வரம்பு போன்ற சில முக்கிய அம்சங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லாதவர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டம் சரியான தேர்வாக இருக்கும். இதில் நீங்கள் செலுத்தும் தொகைக்கான வட்டி விகிதம் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. இதில் முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மெச்சூரிட்டி தேதி வரை வழக்கமான சேவிங்ஸ் அக்கவுண்ட்டை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரே முறை தான் பணத்தை போடுவீர்கள். மெச்சூரிட்டியின் முடிவில் நீங்கள் செலுத்தியுள்ள மொத்த முதலீட்டு தொகையுடன் சேர்த்து குறிப்பிட்ட அளவிலான வட்டி தொகையையும் பெறுவீர்கள்.குறைந்தபட்சம் 3 மாதங்களில் இருந்து அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.முதலிலேயே நீங்கள் மொத்த தொகையையும் செலுத்தி விடுவதால் தீர்மானிக்கப்பட்ட வட்டியை பெறுவீர்கள்

இதையும் படிங்க.. வசர தேவைக்கு PF கணக்கில் ரூ.1 லட்சம் எடுக்கலாம் எப்படி தெரியுமா?

ரெக்கரிங்க டெபாசிட் திட்டத்தில் சேரும் ஒருவர் மாத மாதம் குறிப்பிட்ட தொகையை தங்களது RD கணக்கில் செலுத்தி கொண்டே வரலாம். முதலீட்டாளர்கள். இதன் வட்டி விகிதம் பொதுவாக 5.00% - 7.85% வரை இருக்கும்.இதில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யும் வகையிலான திட்டங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவங்களால் வழங்கப்படுகின்றன. மாதாமாதம் நீங்கள் தொகையை செலுத்துவதால் திட்டத்தின் முடிவில் அதற்கேற்ப வட்டியை பெறுவீர்கள்.குறைந்தபட்ச தொகையை மாதாந்திர அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட காலத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு RD நல்ல தேர்வாக இருக்கிறது. நீண்ட காலத்திற்கு சிறிய இடைவெளியில் நிலையான தொகைகளை டெபாசிட் செய்கிறார். RD-ன் காலம் முடிவடையும் போது, நீங்கள் அதுவரை கட்டிய முழு தொகையுடன் வட்டி தொகையும் உங்களுக்கு திருப்பிச் செலுத்தப்படும்.

இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் சேவிங்க்ஸ் தொடங்க வேண்டுமா? உங்கள் கையில் இவ்வளவு தொகை இருந்தால் போதும்!

வட்டி விகிதப்படி நல்ல லாபம் கிடைக்கும்  முதலீடு என்றால் அது பிக்சட் டெபாசிட் திட்டம் தான். காரணம், நீங்கள் FD மற்றும் RD ஓராண்டு திட்டத்தை எடுத்து கொண்டால் FD-ல் நீங்கள் முதலீடு செய்யும் மொத்த தொகையும் ஓராண்டிற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வட்டியை சம்பாதித்து கொண்டிருக்கும். ஆனால் RD-ல் நீங்கள் 1 வருட திட்டத்தை எடுத்து கொண்டு முதல் மாதம் தவணை செலுத்தும் போது அது 12 மாதத்திற்கான வட்டியை பெறும். இரண்டாம் மாதம் கட்டும் போது அது 11 மாதத்திற்கான வட்டியை மட்டுமே பெறும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Post Office, Savings