ஹோம் /நியூஸ் /வணிகம் /

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா? நீங்கள் இந்த சேமிப்புகளை கட்டாயம் தொடங்க வேண்டும்

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா? நீங்கள் இந்த சேமிப்புகளை கட்டாயம் தொடங்க வேண்டும்

குழந்தைகளுக்கான சேமிப்பு

குழந்தைகளுக்கான சேமிப்பு

குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கு முதலீடு செய்ய பிரீமியம் தள்ளுபடியுடன் கூடிய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் ஏற்றவை.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

    ஒரு பெற்றோராக உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு எதையாவது சேமித்து வைக்க வேண்டும் என நீங்கள் நினைக்கலாம். அதற்கு பல முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. பிள்ளைகளின் எதிர்கால முதலீடு, கல்வி, கல்யாணம் போன்ற தேவைகளுக்காக சேமிப்பு அவசியமாகிறது. பெற்றோர் குழந்தைகளின் தேவைக்காக முன்கூட்டியே சேமிக்கத் தொடங்குவது எப்போதும் நல்லது. அப்படி பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது அவர்களது எதிர்காலத்தை பாதுகாக்க பெற்றோர் எந்ததெந்த வகையான திட்டங்களில் முதலீடு செய்யலாம் என பார்க்கலாம்...

    சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY):

    சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்பது பெண் குழந்தைகளின் தேவைகளுக்காக பிரத்தியேகமாக நிதியை ஒதுக்கும் முதலீட்டு திட்டமாகும். சுகன்யா சம்ரித்தி யோஜனா 21 வருட கால அளவைக் கொண்டது. இதனை 10 வயதுள்ள பெண் குழந்தைகளின் பெயரில் மட்டுமே தொடங்க முடியும். 21 ஆண்டு கால அவகாசத்தில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு இடையில் ஏதேனும் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே திட்டத்தை முன்கூட்டியே முடித்துக்கொள்ள முடியும்.

    மிடில் கிளாஸ் மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 4 சேமிப்பு திட்டங்கள்!

    மேலும், சிறுமிக்கு 18 வயது நிறைவடையும் போது, ​​சிறுமியின் உயர்கல்விக்காக, முந்தைய ஆண்டு கணக்கு இருப்பில் அதிகபட்சமாக 50 சதவீதத்தை திரும்பப் பெறலாம். மேலும், ஒரு பெண்ணுக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு, அவளது திருமணத்தின் நோக்கத்திற்காக எப்போது வேண்டுமானாலும் கணக்கை நிறைவு செய்து பணத்தை பெறலாம். இந்த முதலீடு பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகையைப் பெறத் தகுதிபெறுகிறது மற்றும் பெறப்படும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

    பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (PPF):

    பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (PPF) என்பது 15 வருட திட்டமாகும், இது 15 ஆண்டுகளுக்கு வழக்கமான பங்களிப்புகளை செலுத்த வேண்டும். ஒருவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு PPF இலிருந்து வெளியேறலாம் அல்லது 4ம் ஆண்டில் இருந்து முதலீட்டு தொகையில் இருந்து கடன் பெறலாம் மற்றும் 7ம் ஆண்டுக்குப் பிறகு முதலீட்டு தொகையில் இருந்து சிறிதளவு நிதியை திரும்ப பெறலாம்.

    PM cares : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை!

    இந்த முதலீட்டில் ஒருவருக்கு ஒரு அக்கவுண்ட் மட்டுமே திறக்க முடியும். வேண்டுமானால் மற்றொரு PPF கணக்கு மைனர் குழந்தையின் பெயரில் திறக்கலாம். குறைந்தபட்சம் ரூ 500 மற்றும் அதிகபட்சம் ரூ 1.5 லட்சம் (சுய மற்றும் சிறு கணக்கு) PPF இல் டெபாசிட் செய்யலாம். PPF இல் செய்யப்படும் முதலீடு, பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகையைப் பெறத் தகுதிபெறுகிறது மற்றும் பெறப்படும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

    ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்:

    படிப்பு, தொழில் போன்ற எதிர்கால தேவைக்காக 7 ஆண்டுகள் அவகாசம் உள்ள குழந்தைகளின் பெற்றோர் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் ஃபண்டுகளில் தொடர்ந்து செயல்படும் திட்டங்களுடன் ஒரு முக்கிய போர்ட்ஃபோலியோவை உருவாக்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைக்கு என தனி ஃபோர்ட்ஃபோலியோவை உருவாக்கி, சுமார் 3 வருடங்கள் வரை தொடர்ந்து முதலீடு செய்வது நல்ல பலனைத் தரும்.

    பிரீமியம் தள்ளுபடியுடன் கூடிய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் (WOP):

    குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கு முதலீடு செய்ய பிரீமியம் தள்ளுபடியுடன் கூடிய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் ஏற்றவை. ஆயுள் காப்பீட்டு பாலிசியில் பிரீமியம் தள்ளுபடி என்பது, பாலிசிதாரர் இறந்தாலோ அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் தவணையை கட்டமுடியாமல் போனாலோ பாலிசி முடிவுக்கு வருவதை தவிர்க்க உதவுகிறது. இத்திட்டம் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனம் உறுதியளிக்கப்பட்ட தொகையை செலுத்துவதோடு, உரிய தேதியில் திட்டத்தில் பிரீமியத்தையும் சேர்த்து வைக்க வழிவகை செய்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Post Office, Savings