• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பிக்சட் டெபாசிட் திட்டத்தை விடுங்க... அதை விட பெஸ்ட் திட்டத்தை பற்றி தெரிஞ்சிக்கோங்க!

பிக்சட் டெபாசிட் திட்டத்தை விடுங்க... அதை விட பெஸ்ட் திட்டத்தை பற்றி தெரிஞ்சிக்கோங்க!

சேமிப்பு

சேமிப்பு

அதிகபட்சமாக ரூ.15 லட்சம் சேமிக்கலாம். வயதான தம்பதியினர் ரூ.30 லட்சம் வரை சேமிக்கலாம்

  • Share this:
    பிக்சட் டெபாசிட் திட்டத்தை விட நல்ல லாபம் மற்றும் வருவாய் தரும் முதலீடு திட்டம் பற்றி தான் பார்க்க போகிறோம்.

    டைனமிக் ஃபன்ட் முதலீடு பற்றி தெரியுமா? நீண்டகால முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்கள் பல்வேறு வகையான கடன் நிதி பத்திரங்களில் முதலீடு செய்யலாம். குறிப்பாக அரசின் பாதுகாப்பு ஆவணங்கள், கார்ப்பரேட் கடன் பத்திரங்கள், மூலதன சான்றுகள், வர்த்தக சான்றுகள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இதேபோல் எஸ்.ஐ.பி, யூலிப்ஸ் போன்ற நீண்ட சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். நீண்டகால முதலீடு திட்டங்கள், நம்பகத்தன்மையுடன் இருப்பதுடன் நிலையான வருவாயை கொடுக்கும் என்பதையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அடுத்தது கடன் நிதி பத்திரங்களில் முதலீடு செய்வது. குறைவான வரி இழப்புடன் அதிக வருவாய் பெறுவதற்கு இந்தவகை முதலீடுகள் சிறந்தவையாக இருக்கும். ஏற்கனவே டெப்ட் மியூட்சுவல் பண்ட்டுகளில் முதலீடு செய்தவர்கள் இந்த திட்டங்களை தொடரலாம். வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், கடன் நிதி பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும். வட்டி விகிதங்கள் சரிந்தாலோ அல்லது நிலையாகவே இருந்தாலோ முதலீட்டுகான வருவாயில் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது .

    மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் 60 வயத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் பணத்தை சேமித்துக் கொள்ளலாம். ஒருவர் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் சேமிக்கலாம். வயதான தம்பதியினர் ரூ.30 லட்சம் வரை சேமிக்கலாம். வங்கி சேமிப்பு கணக்குகளில் சேமிக்கப்படும் பணத்துக்கு 6.2% வட்டி அளிக்கப்படும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 7.4 % வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். சில திட்டங்களும் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.

    எனவே சேமிப்பு அல்லது குறுகிய கால முதலீடு என்றவுடன் உடனே பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இதுப்போன்ற திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள். கடன் ரிஸ்க், முதலீட்டு காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனக்கான திட்டத்தை தேர்ந்தெடுப்பது அவசியம். இந்த திட்டங்கள் குறித்த கூடுதல் தகவலுக்கு ஆன்லைனில் தெரிந்த கொள்ளவும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: