• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • நடப்பு கணக்கு VS சேமிப்பு கணக்கு - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

நடப்பு கணக்கு VS சேமிப்பு கணக்கு - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!


நடப்பு கணக்கு VS சேமிப்பு கணக்கு

நடப்பு கணக்கு VS சேமிப்பு கணக்கு

சேமிப்பு கணக்குகள் சேமிப்பை வலியுறுத்துவதற்கும், நடப்பு கணக்குகள் நிறுவனங்கள் வழக்கமான பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கும் உருவாக்கப்பட்டன. நடப்பு கணக்குகளைக் காட்டிலும் சேமிப்பு கணக்குகளுக்கு கூடுதல் வட்டி கொடுக்கப்படுகிறது.

  • Share this:
    நடப்பு கணக்கு (Current Account) மற்றும் சேமிப்பு கணக்குகள் (savings account) வெவ்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டவை. சேமிப்பு கணக்குகள் சேமிப்பை வலியுறுத்துவதற்கும், நடப்பு கணக்குகள் நிறுவனங்கள் வழக்கமான பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கும் உருவாக்கப்பட்டன. நடப்பு கணக்குகளைக் காட்டிலும் சேமிப்பு கணக்குகளுக்கு கூடுதல் வட்டி கொடுக்கப்படுகிறது.

    நிறுவனங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் நடப்புக் கணக்குகளை, தனிநபர்களும் பரிவர்த்தனை செய்ய முடியும். அவர்களுக்கு மாதாந்திர பரிவர்த்தனை வரம்பு உள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்க வேண்டியது அவசியம். இருப்புத் தொகை அளவு வங்கிகளுக்கு வங்கி மாறுபடும்.

    ஏடி.எம்.களில் பணம் எடுக்கச் செல்லும்போது திரையில் நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு என இரு விருப்பங்கள் திரையில் தோன்றும். ICICI, Axis Bank, SBI, Kotak Mahindra Bank, HDFC Bank, Citibank, YES Bank, IndusInd உள்ளிட்ட பல வங்கிகளிலும் இந்த விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை பார்த்திருக்கலாம். நடப்பு கணக்குகளுக்கும், சேமிப்பு கணக்குகளுக்கு உள்ள வித்தியாசத்தையும், இரண்டுக்கும் இருக்கும் பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.

    சேமிப்பு கணக்குகள் (Savings account)

    சேமிப்பு கணக்குகளில் இரு வகைகள் உள்ளன. நீண்ட கால தொடர் சேமிப்பு மற்றும் வழக்கமான சேமிப்பு கணக்கு. நீண்ட கால சேமிப்பு கணக்குகளுக்கு நிபந்தனைகளும், வரைமுறைகளும் இருக்கும். இதில் ஒரு தொகையை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். அந்த தொகைக்கு வங்கிகள் கூடுதல் வட்டி வழங்கும். மாதாந்திர ஊதியம் வாங்குபவர்கள் உள்ளிட்டோருக்கும் சேமிப்பு கணக்கு தொடங்கப்படும். ஆனால், அவர்களுக்கு குறைந்த வட்டி மட்டுமே வங்கிகள் கொடுக்கும். குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும். ஆனால், எப்போது வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

    ALSO READ |  மியூச்சுவல் ஃபண்டில் தொடக்கத்தில் எவ்வளவு முதலீடு செய்யலாம்? முழு விவரம்!

    சேமிப்பு கணக்குகளுக்கு பொதுவாக 4 முதல் 6 விழுக்காடு வரை வங்கிகள் வட்டி கொடுக்கின்றன. இது வங்கிகளுக்கு வங்கி மாறுபடும். சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் காசோலைகளையும் பயன்படுத்தலாம். நீண்ட கால சேமிப்புகளுக்கு கூடுதல் வட்டியும், வழக்கமான சேமிப்பு கணக்குகளுக்கு குறைவான வட்டியும் கொடுக்கப்படுகிறது.

    நடப்புக் கணக்குகள் (Current Account)

    மேலே குறிப்பிட்டதுபோல் வழக்கமான பணப் பரிவர்த்தனைகளுக்காக நடப்பு கணக்குகள் உருவாக்கப்பட்டன. தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வணிகர்கள், நிறுவன உரிமையாளர்கள் இந்த கணக்குகளை வைத்திருப்பார்கள். நடப்பு கணக்குகளில் செலுத்தப்படும் பணத்துக்கு எந்தவித வட்டியும் வழங்கப்படாது. அதிகபட்ச நிதி பரிவரிவர்த்தனை என்ற எந்த வரம்பும் இருக்காது.

    நோக்கம்

    சேமிப்பு கணக்குகள், மாதாந்திர ஊதியம் பெறும் ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்றதாக இருக்கும். குறுகிய கால நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு உகந்ததாக இந்த சேமிப்பு கணக்கு இருக்கும். உதாராணமாக, கார் வாங்குதல், திருமணத்துக்கு நிதி சேர்த்தல், விடுமுறைக்கான சேமிப்புகளை இந்தக் கணக்கில் வைக்கும்போது, குறைந்தபட்ச வட்டியும் கிடைக்கும்.

    ALSO READ |  மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்றால் என்ன? இதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!

    நடப்பு கணக்கைப் பொறுத்தவரை அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்களுக்கு உகந்தாக இருக்கும். தொழில் செய்பவர்கள் அன்றாடம் லட்சக்கணக்கில் பணத்தை பரிவர்த்தனை செய்ய வேண்டியிருக்கும். அவர்கள் சேமிப்புக் கணக்கில் அந்தப் பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. ஏனென்றால், அந்த கணக்குகளுக்கு பணம் எடுப்பதற்கும், பணத்தை வைத்துக் கொள்வதற்கும் சில நிபந்தனைகள் மற்றும் வரையறைகள் இருக்கும். ஆனால் இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அந்த வரையறை இருக்காது என்பதால், நிறுவனங்கள், தொழிலதிபர்கள் நடப்பு கணக்குகளை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள்.

    மாதாந்திர பரிவர்த்தனை

    சேமிப்பு கணக்குகளுக்கு மாதம்தோறும் மேற்கொள்ளக்கூடிய பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்ச வரம்புகளை வைத்திருக்கும். ஏ.டி.எம்களில் பணம் எடுப்பது கூட குறிப்பிட்ட வரம்புக்குள் மட்டுமே பணம் எடுக்க முடியும். அதனை கடந்து பணம் எடுக்கும்போது, வங்கிகளால் குறிப்பட்ட தொகை பரிவர்த்தனைக் கட்டணம் விதிக்கப்படும். பொதுவாக அனைத்து வங்கிகளும் 3 முதல் 5 பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பதில்லை. அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

    ALSO READ |  நிகர சொத்து மதிப்பு (NAV) என்றால் என்ன? எப்படி கணக்கிடப்படுகிறது? முழு விவரங்கள் இங்கே!

    சொந்த வங்கி ஏடிஎம்மில் எடுத்தால் ஒரு கட்டணம், பிற வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்தால் அதற்கொரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மேல் கூறிய எந்த வரம்புகளும் இருக்காது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பணம் போடலாம், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஏடிஎம்களிலும் பணம் எடுப்பதற்கு நடப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை

    குறைந்தபட்ச இருப்பு

    குறைந்தபட்ச இருப்புத் தொகையை பொறுத்தவரை இரு வங்கிக் கணக்குகளுக்கும் இருக்கும். ஒப்பீட்டளவில் சேமிப்பு கணக்குகளுக்கு, நடப்பு கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு அதிகமாக இருக்கும். குறைந்தபட்ச இருப்புத் தொகை என்பது, நீங்கள் வங்கிக் கணக்குகளை பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகவும், அக்கவுண்ட் முடங்காமல் இருப்பதற்காகவும் வசூலிக்கப்படுகிறது. சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு மேல் இருக்கும் தொகைகளுக்கு வட்டி கிடைக்கும்.

    ALSO READ |  மியூச்சுவல் பண்ட்ஸ் ஒரு பார்வை- எந்த விதமான முதலீட்டை தேர்ந்தெடுப்பது நல்லது?

    ஆனால், நடப்பு கணக்குகளில் எவ்வளவு தொகை இருந்தாலும் ஒரு விழுக்காடு வட்டிக்கூட கொடுக்கப்படாது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பொறுத்தவரை வங்கிகளுக்கு வங்கி மாறுபடும். அதுவும் நகர்புற கணக்காக இருந்தால் அதிக பட்ச இருப்புத் தொகையும், கிராமப்புற வங்கிக் கணக்காக இருந்தால் ஒப்பீட்டளவில் குறைவான இருப்புத் தொகையும் இருந்தால் போதுமானது.

    வங்கிக் கணக்கு திறப்பது எப்படி?

    வங்கிக் கணக்குகளை திறப்பதற்கான நடைமுறை என்பது இப்போது மிகவும் எளிதாக மாற்றப்பட்டுவிட்டது. உங்களிடம் ஆதார் கார்டு நகல் இருந்தால்போதும். நீங்கள் விரும்பும் வங்கிகளின் கிளைகளுக்கு நேரடியாக சென்று அல்லது ஆன்லைன் வழியாகக்கூட, வங்கிக் கணக்குகளை திறந்து கொள்ளலாம். அதற்குமுன் நீங்கள் எந்தவகை வங்கிக் கணக்கு வைக்க வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். தொழிலதிபராக இருந்தால் நடப்பு கணக்கு திறப்பது சரியானது. மற்ற அனைவரும் சேமிப்பு கணக்கு மட்டுமே பொருந்தும்.

    ALSO READ |  ஃபிக்சட் டெபாசிட் போல மியூச்சுவல் ஃபண்ட்கள் ஏன் நிலையான வட்டி விகிதத்தை வழங்குவதில்லை? காரணம் இதோ!

    நீங்களே நேரடியாக வங்கிக் கிளைகளுக்கு சென்று, புதிய வங்கிக் கணக்கு திறக்க வேண்டும் என்று கூறினால் அதற்கான விண்ணப்பத்தைக் கொடுப்பார்கள். அதில் கேட்கப்பட்டிருக்கும் பெயர், ஊர் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை விவரமாகவும், சரியாகவும் நிரப்பி விடுங்கள். ஏனென்றால், பல்வேறு நடைமுறைகளுக்கு வங்கி பாஸ்புக்கை ஆவணமாகவும் பயன்படுத்தலாம். தவறான தகவல்கள் கொடுத்துவிட்டால், அதனை நீக்குவதற்கு மீண்டும் வங்கிகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். தகவல்களை சரியாக நிரப்பிய பின்னர், இருப்புத் தொகையுடன் அந்த விண்ணப்பதைக் கொடுத்தால் ஒரே நாளில் வங்கிக் கணக்கு உங்கள் பெயரில் திறக்கப்பட்டுவிடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: