• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சேமிப்புக்கு நல்ல ரிட்டன்ஸ் பார்க்க ஆசையா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

சேமிப்புக்கு நல்ல ரிட்டன்ஸ் பார்க்க ஆசையா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

சேமிப்பு திட்டம்

சேமிப்பு திட்டம்

நல்ல ரிட்டன்ஸ் உடன் கூடிய முதலீட்டு கணக்கை தேடி கொண்டிருப்பவர்களுக்கு ரெக்குரிங் டெபாசிட் திட்டம் கண்டிப்பாக கைக்கொடுக்கும் யூஸ் பண்ணிக்கோங்க.

  • Share this:
    சேமிப்புக்கு நல்ல ரிட்டன்ஸ் எதிர்பார்ப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதை நாம் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் முன்பே நன்கு விசாரித்து வட்டி, முதிர்வு தொகை எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பின்பு தான் ஸ்கிம்மை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில் தபால் நிலைய முதலீடுகள் தான் அதற்கு ஏற்றவை.காரணம் உங்கள் முதலீடுக்கு பாதுகாப்பும் கிடைக்கும் அதே சமயத்தில் நல்ல ரிட்டர்ன்ஸும் கிடைக்கும். கூடவே வரிச்சலுகைகளும் வழங்கப்படுகின்றன. போஸ்ட் ஆபீஸில் செயல்பாட்டில் இருக்கும் ரெக்குரிங் டெபாசிட் திட்டத்தை பற்றி இப்போது பார்க்கலாம்.

    இந்த திட்டத்தின் பயன்கள், சிறப்பம்சங்கள், வட்டி விகிதம் என அனைத்து தகவல்களை இங்கே தெரிந்து கொண்ட பின்பு ஒரு நல்ல முடிவை எடுங்கள்.வெறும் ரூ. 100 முதலீடாக செலுத்தி இந்த சேமிப்பு திட்டத்தில் சேரலாம். உச்சவரம்பு ஏதும் கிடையாது. நீங்கள் விரும்பிய பணத்தை முதலீடு செய்து கொள்ள இயலும். போஸ்ட் ஆபீஸின் ரெக்குரிங் டெபாசிட் திட்டத்தின் லாக்-இன் ப்ரீயட் 5 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் வங்கியில் இது அப்படியே மாறியிருக்கும்.

    இந்த சேமிப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்டு வரும் வட்டியானது 5.8% ஆகும். மாதம் 10 ஆயிரம் என்று 10 வருடங்களுக்கு செலுத்தும் பட்சத்தில் உங்களுக்கு வட்டியுடன் ரூ. 16,28,963 ரிட்டர்ன்ஸாக கிடைக்கும். சில நேரத்தில் பிரீமியம் தொகை கட்ட மறந்தாலோ தவறவிட்டாலோ அதற்கு உங்களிடம் 1% முதலீடு அபராதமாக
    வசூலிக்கப்படும்.முதலீடு ரூ. 40 ஆயிரத்தை தாண்டும் பட்சத்தில் 10% வருடாந்திர வரி பிடித்தம் செய்யப்படும். எனவே நல்ல ரிட்டன்ஸ் உடன் கூடிய முதலீட்டு கணக்கை தேடி கொண்டிருப்பவர்களுக்கு ரெக்குரிங் டெபாசிட் திட்டம் கண்டிப்பாக கைக்கொடுக்கும் யூஸ் பண்ணிக்கோங்க.

    போஸ்ட் ஆபீஸில் மட்டுமில்லை அரசு, தனியார் வங்கிகளிலும் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் விதிமுறை சற்று மாறுபடும். வங்கிகளை பொறுத்து வட்டி விகிதமும் மாறுகிறது. தனியார் வங்கிகளை பொருத்தவரையில் ஆக்ஸிஸ் வங்கி 5.50% வட்டியை 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வழங்குகிறது.எச்.டி.எஃப்.சி. வங்கி 5.50%, யெஸ் வங்கி 7.00% வட்டி வழங்குகிறது. பொதுத்துறை வங்கி லிஸ்டில் எஸ்.பி.ஐ. வங்கி 5 முதல் 10 வருடங்களுக்கான முதலீட்டிற்கு 5.40% வட்டியை வழங்குகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: