பிரபல வங்கி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி.. சேவிங்க்ஸ் அக்கவுண்டுக்கு இனி அந்த வட்டி கிடையாது

சேமிப்பு கணக்கு வட்டி

சேமிப்பு கணக்கு தொடங்க இருப்பவர்கள் இந்த தகவலை தெரிந்து கொண்டு செல்வது நல்லது.

 • Share this:
  பிரபல  வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது

  சேமிப்பு கணக்கு என்பது அவசியமான ஒன்று. அதிலும் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு முன்பு நல்ல வட்டி கிடைக்கும் வங்கியை தேர்ந்தெடுப்பது அவசியம். அதே போல் பொத்துறை வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது எப்போதுமே பயன் தரும். அது தவிர, தனியார் வங்கிகளை தேர்ந்தெடுக்கும் போது வட்டி விகிதங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஒருமுறை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். காரணம், சேமிப்பு கணக்கில் நல்ல வட்டி என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் பிரபல பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிட்டிருந்தால் இந்த தகவலை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

  ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இந்த வங்கியில் சேமிப்பு கணக்கில் அளிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் செப் 1 முதல் மாற்றப்பட்டுள்ளன. அதாவது ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும் சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு 2.90 விழுக்காடு வட்டி வழங்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செப் 1 ஆம் தேதி முதலே இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தது என்பது கூடுதல் தகவல்.

  புதிய மாற்றத்தின்படி 100 கோடி ரூபாய்க்கு குறைவான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 3 விழுக்காட்டில் இருந்து 2.9 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கு முன்பு இருந்த நடைமுறையை பார்த்தால், பஞ்சாப் நேஷனல் வங்கியில்சேமிப்புக் கணக்குகளில் 100 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட டெபாசிட் கணக்குகளுக்கு வட்டி விகிதம் 3% இருந்தது. தற்போது அது 2.9% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  இந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டங்களை பொருத்தவரையில் 2.9% முதல் 5.25% வரை வட்டி வழங்கப்படுகிறது. எனவே, இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க இருப்பவர்கள் இந்த தகவலை தெரிந்து கொண்டு செல்வது நல்லது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: