• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சேமிப்பு கணக்குக்கு 7% வட்டி தரும் வங்கிகள் லிஸ்ட்!

சேமிப்பு கணக்குக்கு 7% வட்டி தரும் வங்கிகள் லிஸ்ட்!

7% வட்டி

7% வட்டி

எந்த வங்கிகளில் அதிக வட்டித் தொகை கிடைக்கிறது என்பது மக்கள் அறிந்திருக்கவில்லை.

  • Share this:
    சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏராளமான சலுகைகள் உள்ளன. அவரச தேவைக்கு வங்கிக் கடன் முதல் மருத்துவச் செலவு வரை சேமிப்பைக் காட்டி வங்கிகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த சலுகைகளுடன் சேமிப்பு கணக்குகளுக்கு வருமானமும் கிடைக்கும். வங்கிகள் ஏராளமாக இருப்பதால், எந்த வங்கிகளில் அதிக வட்டித் தொகை கிடைக்கிறது என்பது மக்கள் அறிந்திருக்கவில்லை. அதனால், சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கு 7 விழுக்காடு வரை வட்டி தரும் 5 வங்கிகளை தெரிந்து கொள்வோம்.

    பொதுத்துறை மற்றும் தனியார் பெரிய வங்கிகளைவிட சிறு வங்கிகள் அதிக வட்டிகளை கொடுக்கின்றன.

    1. உஜ்ஜீவன் :

    நாட்டின் பல பகுதிகளில் உஜ்ஜீவன் சிறிய வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தொகை வழங்கி வந்த இந்த வங்கியில், சேமிப்பு கணக்குகளுக்கு 7 விழுக்காடு வரை வட்டி கொடுக்கிறது. மற்ற வங்கிகளைக் காட்டிலும் வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகளையும் கொடுத்து வருகிறது.

    2. ஏ.யூ ஸ்மால் பைனான்ஸ் பேங்க் :

    ஏ.யூ ஸ்மால் பைனான்ஸ் வங்கி, சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 7 % வரை வட்டி கொடுக்கிறது. ஆனால், இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு உள்ளது. சேமிப்பு கணக்குகள் குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை மினிமம் பேலன்ஸ் தொகை அக்கவுண்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

    3. எக்விடாஸ் :

    உஜ்ஜீவன் வங்கியைப் போலவே எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியும், கிராமப்புற மற்றும் நகர்புற மகளிர் குழுக்களுக்கு கடன் தொகை வழங்கி வருகிறது. குறைந்த வட்டியில் கடன் தொகை வழங்குவதால் ஏராளமானோர் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த வங்கியும் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு அதிகபட்சம் 7 விழுக்காடு வரை வட்டி வழங்குகிறது. ஆனால், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 2,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை மினிமம் பேலன்ஸ் தொகை வைத்திருக்க வேண்டும்.

    4. டி.சி.பி வங்கி (DCB Bank) :

    டி.சி.பி வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு 6.65 விழுக்காடு வரை வட்டி வழங்குகிறது. மற்ற வங்கிகளைக் காட்டிலும் சிறந்த வட்டி விகிதங்களையும், சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் 2,500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

    5. சூரியோதய் சிறு நிதி நிறுவனம் (Suryoday Small Finance Bank) :

    இந்த வங்கி அதிகப்பட்சமாக 6.25 விழுக்காடு வரை சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

    வங்கி தொடர்பான சிறந்த ஆலோசனைகளை வழங்கி வரும் பேங்க் பசார் வலைதளம், செப்டம்பர் மாத நிலவரப்படி இந்த வட்டி விகிதங்களை தொகுத்து கொடுத்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: