வங்கிகளில் சேமிப்பு கணக்கு என்பது அவசியமான ஒன்று. பல்வேறு தேவைகளை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட சில வங்கிகளில் தனியார் மற்றும் அரசு வங்கிகளில் சேமிப்பு கணக்கை தொடங்குகின்றனர். இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பாக வரவு வைக்கின்றனர். அந்த தொகைக்கு அதிகளவு வட்டி கிடைத்தால் மட்டுமே அதன் பயன் இருமடங்காகும். அந்த வகையில் சில அரசு மற்றும் தனியார் வங்கிகளை காட்டிலும் வாடிக்கையாளர்களை கவர சிறு நிதி நிறுவன வங்கிகள் சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி தருகின்றன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
gold scheme: தங்கத்தில் முதலீடு செய்ய நல்ல சான்ஸ்.. முழு விவரம் இதோ!
பிரபல நிதி நிறுவன வலைத்தளம் வெளியிட்டிருக்கும் தகவலின் படி பிரபல சிறு நிதி வங்கிகள் சேமிப்பு கணக்குக்கு 7% வரை வட்டி வழங்குகின்றன. அதே போல் இந்த வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கும் அதிக வட்டி வழங்கப்படுகின்றன. பொதுத்துறை வங்கியை காட்டிலும் இந்த வங்கிகளில் fd திட்டத்தின் வட்டி அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பணத்துக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்த பின்பு இதுப்போன்ற நிதி நிறுவன வங்கிகளில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அறிவுRUத்தப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி வரும் வங்கிகளின் லிஸ்ட் :
AU Small Finance Bank : இந்த வங்கியில் டெபாசிட் செய்யப்படும் தொகையை பொறுத்து சேமிப்பு கணக்குகளுக்கு 7% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதே போல் வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை மாதாந்திர இருப்பை அக்கவுண்டில் கட்டாயம் பராமரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Suryoday Small Finance Bank : இந்த வங்கியில் சேமிப்புக் கணக்குகளுக்கு 6.25% வரை வட்டி வழங்கப்படுமாம்.சராசரியாக ரூ. 2,000 மாதாந்திர இருப்புத் தேவையைப் பராமரிக்க வேண்டும் எனப்து கூடுதல் தகவல்.
CREDIT CARD : வரப் போகும் முக்கிய மாற்றம்.. கிரெடிட் கார்டு யூசர்கள் நோட் பண்ணிக்கோங்க!
Equitas Small Finance Bank : இந்த வங்கியில் செயல்படும் சேமிப்பு கணக்கில் வாடிக்கையாளர்கள் ரூ. 5 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ. 50 லட்சம் வரை டெபாசிட் செய்வதற்கு 7% வட்டி வழங்கப்படுகிறது.
Ujjivan Small Finance Bank : இங்கு சேமிப்பு கணக்குகளுக்கு 7% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதே போல் வாடிக்கையாளர்கள் ரூ.10 கோடிக்கு மேல் முதலீடு செய்தால் 6.75% வரை வட்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுக் குறித்து மேலும் சந்தேகங்கள் இருந்தால் வாடிக்கையாளர்கள் வங்கியின் இலவச உதவி எண்களை அழைத்தும் விவரங்களை பெறலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank, Bank accounts, Savings