Home /News /business /

சேமிப்பு கணக்கு தொடங்க பெஸ்ட் வங்கி இதுதான்.. வட்டி மட்டுமே 7% கொடுக்குறாங்க!

சேமிப்பு கணக்கு தொடங்க பெஸ்ட் வங்கி இதுதான்.. வட்டி மட்டுமே 7% கொடுக்குறாங்க!

சேமிப்பு கணக்கு

சேமிப்பு கணக்கு

savings account interest : ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேலெம, தங்களிடம் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 7% வட்டியை வழங்குகிறது.

    அவசர கால நிதித் தேவைகளுக்கு, சம்பாதிக்கும் பணத்தில், ஒரு சிறிய தொகையையாவது சேமித்து வைக்க வேண்டும். பொதுவாக, தேவைப்படும் நேரத்தில் எளிதாக பணம் எடுப்பது போல இருக்கும் வகையில் சேமிப்பின் குறிப்பிட்ட பகுதி இருக்க வேண்டும். அந்த வகையில், பலரும் எந்த ஆபத்தும் இல்லாத பாதுகாப்பான சேமிப்பாகக் கருதுவது, வங்கி சேமிப்புக் கணக்குகள். பெரிய, முதன்மையாக இயங்கி வரும் தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும் போது, சிறிய ஃபைனான்ஸ் நிறுவனங்களும், சிறிய தனியார் வங்கிகளும், பேமெண்ட் பேங்க்குகளும் தற்போது சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டியை வழங்குகின்றன.

    வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்த்து, அதிக நிதிகளை தங்கள் வங்களில் சேமிக்க வைப்பதே இதன் நோக்கமாகும். சேமிப்புக் கணக்குக்கு பெரிய அளவில் வட்டி வழங்கப்படுவதில்லை என்றாலும், சிறிய நிதி நிறுவனங்கள் தற்போது 7% வட்டியை வழங்குகிறது.

    இதையும் படிங்க.. . uidai : ஆதார் கார்டில் இருக்கும் பழைய ஃபோட்டோ பிடிக்கவில்லையா? அப்ப உடனே மாற்றலாம் வாங்க!

    7% வட்டி வழங்கும் நிதி நிறுவனங்கள்

    ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், தங்களிடம் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 7% வட்டியை வழங்குகிறது. நீங்கள் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் சேமித்திருந்தால், ஆண்டு முடிவில், உங்களுக்கு ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய் கிடைக்கும். இதே போல, ஃபின்கேர் ஸ்மால் பினான்ஸ் நிறுவனமும் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு 7% வட்டியை வழங்குகிறது. மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு சிறு நிதி நிறுவனங்கள் அதிகபட்ச வட்டியை வழங்குகிறது.

    6% க்கும் அதிகமாக வட்டி வழங்கும் நிதி நிறுவனங்கள்

    சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், மாதந்திர ஆவரேஜ் இருப்பாக ரூ. 2000 வைத்திருக்கும் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு 6.25% வட்டி வழங்குகிறது. மற்ற சிறிய அளவில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனங்களோடு ஒப்பிடும் பொது, சூர்யோதை வங்கி, அதிக அளவு வட்டியை வழங்குகிறது.

    6% வட்டி வழங்கும் நிதி நிறுவனங்கள்

    ESAF ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு விதமான வட்டியை வழங்குகிறது. வங்கிக்கணக்கில் ஒரு லட்ச ரூபாய் மேல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 6% வட்டியும், ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் 4% வட்டியும் வழங்குகிறது.

    இதையும் படிங்க... Netflix : ரூ.199 சந்தா திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்.. முழு விவரம்!

    ஏர்டெல் பேமெண்ட் பேங்க்ஸ், தனது சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு 6% வட்டி வழங்குகிறது. மற்ற பேமெண்ட் பேங்க்ஸ் சேவை வழங்குனரோடு ஒப்பிடும் போது, ஏர்டெல் அதிக அளவு வட்டியை வழங்குகிறது. அது மட்டுமின்றி, ரிசர்வ் வங்கியும், ஏர்டெல்  பேமெண்ட் பேங்க்ஸ் ஒரு ஷெட்யூல்ட் வங்கியாக அங்கீகரித்துள்ளது. நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபினான்ஸ் பேங்க்கும் சேமிப்புக் கணக்குக்கு 6% வட்டியை வழங்குகின்றது. வங்கிகளின் அதிகாரபூர்வமான இணையத்தளங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank accounts, Savings

    அடுத்த செய்தி