முகப்பு /செய்தி /வணிகம் / சேவிங்க்ஸ் அக்கவுண்டுக்கு 7% வரை வட்டி கிடைக்கும்.. உடனே கிளம்புங்கள்!

சேவிங்க்ஸ் அக்கவுண்டுக்கு 7% வரை வட்டி கிடைக்கும்.. உடனே கிளம்புங்கள்!

சேவிங்க்ஸ்

சேவிங்க்ஸ்

பல மிகப்பெரிய வங்கிகளுடன் ஒப்பிடுகையில், சில சிறிய வங்கிகள் சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டிகளை வழங்குகின்றன. 

தேவைகள் மற்றும் வசதிகளைப் பொறுத்து வங்கிகள் பல்வேறு வகையான சேமிப்புக் கணக்குகளை வழங்குகின்றன. சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மற்றும் டெபாசிட்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. தற்போது, ​​பல மிகப்பெரிய வங்கிகளுடன் ஒப்பிடுகையில், சில சிறிய வங்கிகள் சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டிகளை வழங்குகின்றன.

சிறு நிதி வங்கிகள் என்றால் என்ன?

சிறு நிதி வங்கிகள் என்பது இந்திய அரசின் உதவியுடன் ரிசர்வ் வங்கியால் நிறுவப்பட்ட ஒரு புதிய வகை வங்கியாகும். இது அடிப்படை வங்கிச் சேவைகளை முதன்மையாக வழங்குவதன் மூலம் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற குழுக்களுக்கு மட்டுமே நிதிச் சேவை வழங்கி வருகின்றன. இந்த வங்கிகள் வழக்கமான வங்கிகளைப் போலவே கடன் வழங்குதல் மற்றும் டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது போன்ற அனைத்து அடிப்படை வங்கி நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றன.

உங்கள் கையில் இருக்கும் ஆதார் போலியா..? ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி

சேமிப்பு கணக்கை பொறுத்தவரையில், பெரும்பாலான தனியார் வங்கிகளை விட சிறு நிதி வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஈக்விடாஸ், AU வங்கி, உஜ்ஜீவன் வங்கி மற்றும் ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவை வழங்கும் சேமிப்புக் கணக்கிற்கான சமீபத்திய வட்டி விகிதம் பற்றிய விவரங்கள் இதோ...

1. ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்:

ஈக்விடாஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கு 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. கணக்கின் தினசரி இறுதி இருப்புத் தொகையைப் பயன்படுத்தி வட்டி கணக்கிடப்படும். நேரடிக்கடன் மூலமாக கிடைக்கும் வட்டியை வைத்து, சேமிப்பு கணக்கிற்கான காலாண்டு வட்டி செலுத்தப்படுகிறது. வட்டி விகிதமானது கடைசியாக இருப்பில்உள்ள தொகைக்கு ஏற்ப அதிகரிக்கும்.

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வட்டி! ஆச்சரியம் தரும் சிறு வங்கிகள்

2. AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்:

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி தினசரி கணக்கிடப்பட்டு மாதந்தோறும் செலுத்தப்படும், அதாவது ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் வங்கி 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. வட்டி விகிதமானது இருப்பில் உள்ள தொகை அதிகரிப்பதற்கு ஏற்றார் போல் அமையும்.

உதாரணமாக: ஒரு லட்சத்திற்கும் குறைவான இருப்புத் தொகைக்கு 3.50 சதவீதமும், ஒரு கோடிக்கு அதிகமானது முதல் 10 கோடிக்கு குறைவானது வரையிலான தொகைக்கு 6 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

3. உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்:

சேமிப்புக் கணக்குகளின் மீதான வட்டி, சேமிப்புக் கணக்கில் வைக்கப்பட்டுள்ள நாள் முடிவுத் தொகையில் சேருகிறது மற்றும் காலாண்டுக்கு ஒருமுறை வட்டியானது விநியோகிக்கப்படுகிறது. வட்டி விகிதமானது வாடிக்கையாளர் தனது சேமிப்பு கணக்கில் இருப்பில் வைத்திருக்கும் தொகைக்கு ஏற்ப 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.

எ.கா: ஒரு வாடிக்கையாளர் சேமிப்புக் கணக்கில் ரூ.120,000/-ஐப் பராமரித்தால், ரூ.100,000/-க்கு 3.50% வட்டியும், மீதமுள்ள ரூ.20,000/-க்கு 6.00% வட்டியும் வழங்கப்படுகிறது.

4. ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்:

ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்கிற்கான வட்டியானது அக்கவுண்ட் உள்ள நாள் மற்றும் அதில் உள்ள கடைசி இருப்புத் தொகையை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. வங்கி கணக்கில் உள்ள இருப்பு தொகை அதிகரிப்பதை பொறுத்து வட்டி விகிதமான 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறையும் வட்டி விகிதமானது, வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bank, Bank accounts, Savings