நீண்ட கால காத்திருப்பு.. சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு அதிக வட்டி பெற ஒரு வழி இருக்கு!

சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு அதிக வட்டி

எந்த வங்கியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் சற்று குழம்பி விடுகிறார்கள்.

 • Share this:
  சேவிங்க்ஸ் அக்கவுண்டுக்கு அதிக வட்டி பெற வேண்டும் என நீண்ட நாளாக நினைத்து கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான வழி

  பொதுவாகவே சேவிங்ஸ் அக்கவுண்டை தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். அதிக வட்டி தரும் வங்கி எது? எங்கு லாபம் அதிகம்? என்னென்ன பலன்கள் கிடைக்கும்? இப்படி எல்லாவற்றையும் யோசித்து தொடங்கும் சேமிப்பு கணக்கு எப்போதுமே இரட்டிப்பு பலன்களை தரும். பொதுத்துறை அல்லது தனியார் வங்கி எது உங்கள் தேர்வாக இருந்தாலும் வட்டி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த விஷயத்தில் மட்டும் தெளிவாக இருங்கள்.

  நாம் டெபாசிட் செய்யும் தொகையானது பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் வட்டியும் லாபமாக இருக்க வேண்டும். பெரிய பெரிய வங்கிகளைக் காட்டிலும் சிறிய வங்கிகளில் பெரும்பாலும் சேவிங்ஸ் அகவுண்டுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. நம்மில் பலரும் அதை கவனிக்க மறந்து விடுகிறோம். அதோடு வட்டி விகிதமும் சற்று கூடுதலாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் எந்த வங்கியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் சற்று குழம்பி விடுகிறார்கள்.

  also read.. இத்தனை வருஷம் எஸ்பிஐ-ல் அக்கவுண்ட் வச்சிருங்கீங்களே இந்த தகவல் தெரியுமா?

  இனி அந்த குழப்பம் வேண்டாம். உங்களை வழிநடத்தவே இந்த பதிவு. பொதுவாகவே சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி தரும் வங்கிகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  YES பேங்க்:

  இங்கு சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி. மினிமம் பேலன்ஸ் ரூ.10,000 முதல் ரூ.25,000 மட்டுமே.

  RBL பேங்க்:

  சேமிப்பு கணக்குகளுக்கு 6.25% வரையில் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் ரூ.2500 – 5000 ஆகும்.

  டிசிபி பேங்க்:

  டிசிபி வங்கியில் வட்டி விகிதம் 6.75% மற்றும் மினிமம் பேலன்ஸ் ரூ.2500 முதல் ரூ.5000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  பந்தன் பேங்க்

  பந்தன் வங்கியில் 6% வரை சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் ரூ 5000 மட்டுமே.

  இதுப்போல் பல வங்கிகள் சேமிப்பு கணக்கில் கூடுதல் வட்டிகளை தருகின்றன. அதுக்குறித்து வரும் நாட்களில் பார்க்கலாம்.

  Published by:Sreeja Sreeja
  First published: