சேமிப்பு கணக்கு தொடங்க இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த தகவலை படிக்கவும். மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி கொண்டிருக்கும் இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என திட்டமிட்டிருந்தால் நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்று உள்ளது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சேமிப்பு கணக்கு அவசியமான ஒன்று. குறிப்பிட்டு இந்த வங்கி தான் என்பது இல்லை எந்த வங்கியிலாவது கண்டிப்பாக
சேமிப்பு கணக்கு வைத்திருப்பது அவசியமான ஒன்று. இன்றைய சூழ்நிலையில் அது அத்தியாவசியமும் கூட. காரணம், தற்போது நேரடி பரிவர்த்தனை என்பது குறைந்து விட்டது. வீட்டு பக்கத்தில் இருக்கும் மளிகை கடையில் கூட ஆன்லைன் பரிவர்த்தனை தான். அப்படி இருக்கையில் நீங்கள் டிஜிட்டல் முறையில் எல்லா சேவைகளும் பெற வேண்டும் என்றால் கட்டாயம் பேங்கில் அக்கவுண்ட் இருந்தால் தான் முடியும். அதற்கு ஜீரோ பேல்ன்ஸ் கரண்ட் அக்கவுண்ட் ஓபன் செய்வதை விட சேமிப்பு கணக்காக தொடங்கினால் இன்னும் நல்லது. வட்டியும் கிடைக்கும் அதே சமயம் அக்கவுண்டில் பணத்தை சேமிக்கும் பழக்கமும் உங்களுக்கு வரலாம்.
இதையும் படிங்க.. புது வீடு வாங்கும் போது எதற்கெல்லாம் வரி கட்ட வேண்டும் தெரியுமா? அவசியமான தகவல்!
ஒருவேளை நீங்கள் இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க நினைத்தால் இந்த புதிய அப்டேட்டை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் சேமிப்பு கணக்குகளுக்கு வட்டியை சமீபத்தில் தான் இந்த வங்கி குறைத்தது. அதாவது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புகளுக்கு வட்டி விகிதம் 2.25 சதவீதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.2 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 2.50 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க.. இனி வட்டி கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கிடைக்கும்… சூப்பர் நியூஸ் சொன்ன பேங்க் ஆஃப் பரோடா வங்கி!
இந்த மாதம் தொடக்கம் முதலே இந்த மாற்றம் அமலுக்கு வந்துவிட்டது. இதற்கு முன்னர் இந்த
வட்டி விகிதம் ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு 2.50 சதவீதமாகவும், ரூ.2 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு 2.75 சதவீதமாகவும் இருந்தது. இது மட்டுமில்லை அண்மையில் இந்த வங்கி கொண்டு வந்த அனைத்து டெபாசிட் மாற்றங்களும் வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சியாகவே இருந்து வருகின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.