உங்களுடைய பேங்க் சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் பணத்தை போட்டு வைத்திருப்பது அதை பாதுகாக்க நல்ல வழி. என்றாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களுக்கு மத்தியில், வங்கி மோசடிகள் பற்றி நாம் அனைவருமே தெரிந்து வைத்திருப்பது தான் அந்த பணத்தை பாதுகாக்க சிறந்த வழியாக இருக்கும்.
ஃபிஷிங், விஷிங், கார்டு ஸ்கிம்மிங், அடையாள திருட்டு மற்றும் காசோலை மோசடி உள்ளிட்டவை பேங்க்கில் இருக்கும் பணத்திற்கு அச்சுறுத்தும் பொதுவான சில மோசடிகள் ஆகும். சில முக்கிய விஷயங்களை உங்கள் நினைவில் வைத்து எச்சரிக்கையாக இருந்தால் உங்கள் சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
உங்கள் சேவிங்ஸ் அக்கவுண்ட்டை பாதுகாப்பாக வைத்திருப்பது எவ்வாறு.?
பாஸ்வேர்டில் எச்சரிக்கை:
நீங்கள் மிகவும் வீக்கான Password-ஐ வைத்திருந்தால் ஹேக்கர்கள் எளிதாக உங்கள் ஆன்லைன் பேங்கிங்கை அணுக முடியும். வீக்கான Password-களுக்கு உதாரணங்கள் ‘password’, ‘qwerty’, ‘123456’. இவை தவிர உங்கள் மொபைல் எண், பிறந்தநாள் உள்ளிட்டவையும். எனவே உங்கள் ஒவ்வொரு ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட்களுக்கும் தனித்துவமான மற்றும் ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட்களை பயன்படுத்தவும்.
இந்த வருடம் படிப்புக்காக லோன் வாங்க போறீங்களா? இந்த தவறையெல்லாம் செய்யாதீர்கள்!
இதை உருவாக்க நம்பர்ஸ் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்ஸையும் பயன்படுத்துங்கள். தவிர அவ்வப்போது சீரான இடைவெளியில் உங்கள் பாஸ்வேர்ட்களை மாற்றுங்கள். யாரிடமும் பாஸ்வேர்டை ஷேர் செய்யாதீர்கள். பாஸ்வேர்ட்களை நினைவில் கொள்ள கஷ்டமாக இருந்தால் password manager மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தலாம் அல்லது டைரியில் குறித்து வைத்து கொள்ளலாம்.
பெண்களுக்காக அரசு வழங்கும் கடனுதவிகள்.. எப்படி பெறுவது? முழு விபரம்!
தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிராதீர்கள்:
பாஸ்வேர்ட்டை பிறரிடம் ஷேர் செய்வதால் மட்டுமல்ல, உங்களை பற்றிய முக்கியமான தனிப்பட்ட விவரங்கள், அடையாள சான்றுகள் உள்ளிட்டவற்றையும் முன் பின் தெரியாதவர்களிடம் பகிர்ந்து கொள்வதால் உங்கள் பணத்திற்கு ஆபத்து ஏற்படும். பிறந்த தேதி, கையொப்பம், திருமண தேதி, குடும்ப உறுப்பினர்களின் பெயர், அடையாளச் சான்று போன்ற உங்களின் விவரங்களைப் பயன்படுத்தி மோசடி நபர்கள் நெட் பேங்கிங் லாகின் செய்யும் போது கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்விகளுக்கான பதில்களை யூகித்து, உங்கள் அக்கவுண்ட்டில் உள்ள பணத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அதே போல போன் செய்து வங்கியிலிருந்து பேசுகிறோம், உங்களுடைய நம்பருக்கு வந்திருக்கும் OTP-ஐ சொல்லுங்கள் என்று கூறினாலும் அந்த அழைப்பை கட் செய்து விடுங்கள். எந்த விவரங்களையும் தராதீர்கள். ஏனென்றால், நினைவில் வைத்து கொள்ளுங்கள், வங்கி அதிகாரிகள் ஒருபோதும் வாடிக்கையாளர்களை அழைத்து OTP-ஐ கேட்பதில்லை.
உங்கள் வங்கியின் பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றுங்கள்:
வழக்கமாக வங்கிகள் இ-மெயில் மற்றும் சோஷியல் மீடியாக்கள் மூலம் அவ்வப்போது தகுந்த பாதுகாப்பு ஆலோசனைகளை பகிர்கின்றன. தங்கள் அக்கவுண்ட்களை வாடிக்கையாளர்கள் எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் மற்றும் மோசடிகளில் சிக்காமல் இருப்பது பற்றிய வழிமுறைகளை வங்கிகள் கூறுகின்றன. எனவே இந்த அறிவுரைகளை எப்போதும் கவனமாக பின்பற்றவும்.
பேங்க் ஸ்டேட்மென்ட் மற்றும் மெசேஜ்களை தவறாமல் செக் செய்யவும்:
வங்கிகள் பரிவர்த்தனைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு SMS மற்றும் இ-மெயில்கள் மூலம் தகவல்களை அனுப்புகின்றன. எனவே உங்கள் பேங்க் ஸ்டேட்மென்ட் மற்றும் பேங்க் மெசேஜ்களை தவறாமல் செக் செய்யவும். ஒருவேளை குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை நீங்கள் செய்யவில்லை என்றால் அதை உடனடியாக கண்டறிய மற்றும் இழப்புகளை தவிர்க்க பேங்க் அக்கவுண்டை கண்காணிக்கும் பழக்கம் உதவும்.
பாதுகாப்பான நெட்வொர்க்கில் ஆன்லைன் பேங்கிங்கை பயன்படுத்தவும்:
ஹோட்டல்கள், உணவகங்கள், கஃபேக்கள் போன்ற பொது நெட்வொர்க்கில் இன்டர்நெட் பயன்படுத்தும் போது ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகளை செய்வதை தவிர்க்கவும். ஒருவேளை அவசரத்திற்கு பப்ளிக் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி பேங்க் அக்கவுண்ட்டை நீங்கள் அணுகியிருந்தால், பாதுகாப்பான நெட்வொர்க்கை பெற்றவுடன் உங்கள் பாஸ்வேர்டை மாற்றுவது நல்லது.
செக்புக்கை பாதுகாப்பாக வைத்திருங்கள்:
உங்கள் செக்புக்கைஎப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள். அதே போல மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அல்லது உங்கள் செக்-ஐ பயன்படுத்தி நிதி பரிவர்த்தனைகளை செய்ய உங்கள் கையொப்பத்தை நகலெடுக்கலாம்.
டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது கவனம்:
பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள ஏடிஎம்-களில் உங்கள் கார்டை பயன்படுத்தாமல் தவிர்ப்பது, உங்களது கார்டை மோசடி நபர்கள் குளோனிங் செய்வதை தவிர்க்க உதவும். மேலும் POS மெஷினை பயன்படுத்தும் போது ஏதேனும் அசாதாரண இணைப்புகள் உள்ளதா என சரி பார்க்கவும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank, Bank accounts, Savings