நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி இந்த வசதிகளை உங்களுக்கு தருகிறதா?

வங்கி தரும் சலுகைகள்

ஆன்லைன் ஷாப்பிங் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் சலுகைகளை வழங்குகின்றன.

 • Share this:
  நீங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கி உங்களுக்கு இந்த வசதிகளை தருகிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

  சேமிப்பு கணக்கை தொடங்குவது எப்போதுமே நன்மை பயக்கும்.இரண்டு அல்லது மூன்று கரண்ட் அக்கவுண்டுகளை வைத்திருந்தாலும் எப்போதுமே சேமிப்பு கணக்கை வைத்திருங்கள். அதிலும் தனியார் வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பது பல நன்மைகளை அளிக்கும். அப்படி ஒருவேளை சேமிப்பு கணக்கு வைத்திருந்தால், உங்கள் வங்கி கீழே தெரிவிக்கும் இந்த வசதிகளை உங்களுக்கு வழங்குகிறதா? இல்லையா? என்பதை செக் செய்து கொள்ளுங்கள். ஒருவேளை வழங்கவில்லை என்றால் சம்மந்தப்பட்ட வங்கியை அணுகி இதுக் குறித்த விரிவான விவரங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

  சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் அதிகம் பணம் சேர்ந்துவிட்ட உடனே நீங்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான விண்ணப்பத்தை ஃபில் செய்து கொடுத்தாலே போதும் உங்கள் கணக்கில் பிக்சட் டெபாசிட் அக்கவுண்ட் தொடங்கப்பட்டுவிடும். லட்சத்திற்கு அதிகமாக சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் பணம் இருந்தால் லாக்கர் வாடகை, டீமேட் கட்டணம், பெட்ரோல் பங்க், ரெஸ்டாரன்ட்டுகள், தியேட்டர்கள், ஆன்லைன் ஷாப்பிங் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் சலுகைகளை வழங்குகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  8 முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு சேவிங்ஸ் அக்கவுண்டுடன் ஆக்சிடென்டல் டெத் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஒருசில வங்கிகள் வழங்குகின்றன. இதற்கு அதிக பணம் எல்லாம் செலுத்த தேவையில்லை. ரூ. 2 லட்சம் காப்பீடு திட்டத்திற்கு வருடத்திற்கு ரூ.100 மட்டுமே செலுத்த வேண்டும். இதுப்போன்ற முக்கியமான வசதிகளும் சேவிங்ஸ் அக்கவுண்டில் உள்ளன. இதுக்குறித்த விவரங்களை வங்கி அதிகாரிகளிடம் விசாரித்து கொள்ளுங்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: