• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • அவசரமாக கடன் வேண்டுமா? உங்கள் சேமிப்பு கணக்கில் இருந்தே கடன் வாங்கலாம் தெரியுமா?

அவசரமாக கடன் வேண்டுமா? உங்கள் சேமிப்பு கணக்கில் இருந்தே கடன் வாங்கலாம் தெரியுமா?

சேவிங்ஸ் கணக்கில் கடன்

சேவிங்ஸ் கணக்கில் கடன்

சேமிப்பு மூலமாகவே எப்படியெல்லாம் கடன் பெற முடியும் என்ற தகவலை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்

  • Share this:
    அவசர தேவைக்கு போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்பு கணக்கில் 50 % வரை கடன் பெறுவது எப்படி என்ற தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    ஒருவேளை நீங்கள் அஞ்சல் சேமிப்பில் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் மற்றும் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு கை கொடுக்கும். அதாவது உங்களுக்கு அவசர தேவை என்றால் நீங்கள் இந்த 2 திட்டங்கள் வழியே கடன் பெறலாம் தெரியுமா? இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை எடுத்துக் கொண்டால் இந்த திட்டத்தில் நீங்கள் சேர்ந்த 1 வருடத்திற்கு பிறகு உங்களால் 50% வரை கடன் பெற முடியும். நீங்கள் வாங்கிய கடனை ஒரே தொகையாக செலுத்த முடிந்தாலும் ஓகே தான். இல்லையெனில் மாதம் ஈஎம்ஐயாகவும் திரும்ப செலுத்தலாம். இந்த கடனுக்கு 2% வட்டி வசூலிக்கப்படும்.

    திரும்பப் பெறும் தேதி முதல் திருப்பிச் செலுத்தும் தேதி வரை வட்டி கணக்கிடப்படும். ஒருவேளை நீங்கள் கணக்கு முதிர்வடையும் வரை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், கடன் மற்றும் வட்டி ஆகியவை ரெக்கரிங் டெபாசிட் கணக்கின் திட்டத்தின் முதிர்வு தொகையில் இருந்து கழித்து மீதி தொகை உங்களிடம் அளிக்கப்படும். இதே போல் பிபிஎஃப் சேமிப்பு திட்டத்திலும் கடன் பெறலாம். அதாவது இந்த திட்டத்தில் 15 ஆண்டு பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் நீங்கள் முதலீடு செய்திருந்தால் 50% வரை நீங்கள் கடன் பெற தகுதியுடையவர்கள் ஆவீர்.சரியாக சேமிப்பை தொடங்கி 1 வருடத்திற்கு பிறகு நீங்கள் கடன் பெற தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே கடன் பெற முடியும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதே போல் நீங்கள் வாங்கிய முதல் கடன் திருப்பிச் செலுத்தப்படாத வரை இரண்டாவது கடன் வழங்கப்படாது. வாங்கிய கடனை 36 மாதத்திற்குள் திருப்பிச் செலுத்தினால், ஆண்டுக்கு 1 சதவீத கடன் வட்டி விகிதம் பொருந்தும். இருப்பினும், 36 மாதத்திற்குப் பிறகு கடனை திருப்பிச் செலுத்தினால், கடன் வழங்கப்படும் நாளிலிருந்து ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதம் பொருந்தும். எனவே இதில் கடன் வாங்கும் போது திருப்பி செலுத்தும் முறையை நீங்கள் முன்பே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

    அவசரதேவை என்றவுடன் அவசரமாக வெளியில் கடன் வாங்கும் பழக்கத்தை விட்டுவிங்கள். உங்கள் சேமிப்பு மூலமாகவே எப்படியெல்லாம் கடன் பெற முடியும் என்ற தகவலை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படாது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: