பணத்தை எந்த வங்கியில் போட்டால் நல்ல லாபம், நல்ல வட்டி கிடைக்கும் என்ற விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
எப்போதுமே சேவிங்ஸ் அக்கவுண்டை தேர்ந்தெடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. காரணம், சேமிப்பு என்பது எப்போதுமே நல்ல லாபத்தை தரக்கூடியதாக தான் இருக்க வேண்டும். அதே போல் வட்டியும் கவனிக்க வேண்டிய ஒன்று. கையில் இருக்கும் பணத்தை சேமித்தால் அதற்கு கண்டிப்பாக நல்ல வட்டி கொடுக்க வேண்டும் இல்லையா? இதனால் தான் பலரும் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து ஃபிக்சட் டெபாசிட், ஆர்.டி டெபாசிட் திட்டங்களில் போட்டு விடுகின்றனர். அதை விட நல்ல வட்டி சேவிங்ஸ் அக்கவுண்டில் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
இந்த நேரத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை விட சிறு வங்கிகள் அதிக வட்டிகளை கொடுக்கின்றன என்பதை பலரும் கவனிக்க மறந்துவிடுகின்றனர். அந்த வகையில் நல்ல வட்டி தரும் சில வங்கிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம். எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி பற்றி தெரியுமா? இங்கு குறைந்த வட்டியில் கிராமப்புற மற்றும் நகர்புற மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லை இந்த வங்கிய சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு அதிகபட்சம் 7 விழுக்காடு வரை வட்டி வழங்குகிறது. இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் குறைந்தபட்சம் 2,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை ஆகும்.
அடுத்தது, டி.சி.பி வங்கி . இங்கு சேமிப்பு கணக்குகளுக்கு 6.65 விழுக்காடு வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் 2,500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமில்லை இந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு அவ்வப்போது சலுகை முறையில் கடனும் வழங்கப்படுகிறது. அதே போல் உஜ்ஜீவன் வங்கியும் சேமிப்பு கணக்குகளுக்கு 7% வட்டி வழங்குகிறது. கூடவே கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் மற்றும் சலுகை முறையில் கடன் வசதியையும் செயல்பாட்டில் வைத்துள்ளது.
மேலும் இதுப்போல் நல்ல வட்டி மற்றும் சலுகைகளை வழங்கும் வங்கி குறித்த விவரங்களை அடுத்தடுத்த பதிவுகளில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.