முகப்பு /செய்தி /வணிகம் / savings account : வங்கியில் தொடங்குவதற்கு முன்பு இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

savings account : வங்கியில் தொடங்குவதற்கு முன்பு இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

சேவிங்க்ஸ் அக்கவுண்ட்

சேவிங்க்ஸ் அக்கவுண்ட்

savings account apply: சேமிப்பு அக்கவுண்ட்களை பொருத்தவரையில், மினிமம் பேலன்ஸ் (குறைந்தபட்ச இருப்பு) எவ்வளவு இருக்க வேண்டும் என்பதுதான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

நம் பணத்தை சேமிக்கவும், அதன் மூலமாக வட்டி பெறவும் வங்கியில் சேமிப்பு அக்கவுண்ட் திறப்பதே முதல் படியாகும். குறிப்பாக, இதர வங்கிச் சேவைகளை பெறுவதற்கும் இது உதவிகரமாக இருக்கும். நாட்டில் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகள் அதிகரித்து வரும் நிலையில், குறைவான செயல்பாட்டுக் கட்டணங்களின் அடிப்படையில் நிறைவான சேவைகளை தரும் சேமிப்பு அக்கவுண்டை தேர்வு செய்வது முக்கியமாகிறது.

நீங்கள் என்னென்ன சேவைகளை எதிர்பார்க்கிறீர்கள், எவ்வளவு பணம் வரவு, செலவு செய்வீர்கள் என்பது உள்பட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சேமிப்பு அக்கவுண்டை தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான சில டிப்ஸ் இந்த செய்தியில் உள்ளது.

இதையும் படிங்க.. pre approved loan : இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்!

அதிக வட்டி எதிர்பார்ப்பு

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு அக்கவுண்டில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அக்கவுண்ட் பராமரிப்பு கட்டணம் என குறிப்பிட்ட தொகையை நீங்கள் இழக்க நேர்ந்தாலும் கூட, அதிக வட்டி கிடைத்தது என்றால் உங்களுக்கு அது பெரும் வரவாக அமையும்.

வட்டி மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில் பெரும்பாலான வங்கிகளில் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலும் 2.5 சதவீதம் முதல் 3.5 சதவீத வட்டியும், சில தனியார் வங்கிகளில் 6.75 சதவீதம் வரையிலான வட்டியும் வழங்கப்படுகிறது.

வட்டி மூலமாக உங்களுக்கு கிடைக்கும் ரூ.10,000 க்கு அதிகமான வருமானம் என்பது வரி பிடித்தம் செய்வதற்கு உட்பட்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

குறைந்த மினிமம் பேலன்ஸ் கொண்ட அக்கவுண்ட்

சேமிப்பு அக்கவுண்ட்களை பொருத்தவரையில், மினிமம் பேலன்ஸ் (குறைந்தபட்ச இருப்பு) எவ்வளவு இருக்க வேண்டும் என்பதுதான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மாதாந்திர சராசரி இருப்புத் தொகை (AMB) என்று வங்கிகள் இதை கணக்கீடு செய்கின்றன. இதை வைத்திருக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இதையும் படிங்க.. வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது.. பிரபல வங்கி அறிவிப்பு!

சில ப்ரீமியம் சேவைகளை வழங்கும் சேமிப்பு அக்கவுண்ட்களில் மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரையில் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. அதே சமயம், “அனைவருக்கு வங்கிக் கணக்கு’’ (ஜன் தன்) திட்டத்தின் கீழ் திறக்கப்படும் அக்கவுண்டில் பூஜ்யம் பேலன்ஸ் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இதுபோன்ற அக்கவுண்ட்களில் டெபிட் கார்டு, செக் புக் போன்ற சேவைகள் கிடைக்காது.

மறைமுக கட்டணங்கள்

உங்கள் சேமிப்புத் தொகைக்கு எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்பதைக் காட்டிலும், மறைமுக கட்டணங்கள் எந்த அளவுக்கு, என்னென்ன சேவைகளுக்கு வசூல் செய்யப்படுகிறது என்பது மிக முக்கியமானது. வருடாந்திர அக்கவுண்ட் பராமரிப்புக் கட்டணம், ஏடிஎம் கட்டணம், சராசரி குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கவில்லை என்றால் விதிக்கப்படும் அபராதம், பணப் பரிமாற்ற சேவைக் கட்டணம் போன்ற பல விஷயங்களை ஆராய வேண்டும்.

கூடுதல் பலன்கள் மற்றும் டிஸ்கவுண்ட்கள்

திரையரங்குகளுக்கான இலவச டிக்கெட், ஏர்போர்ட் மற்றும் ரயில்வே லாங்கே ஆக்சஸ், ஓடிடி தளங்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன், டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான போனஸ் பாயிண்ட்ஸ் உள்பட பல்வேறு சலுகைகள் மற்றும் டிஸ்கவுன்ட்களை வங்கிகள் வழங்குகின்றன.

சேமிப்பு அக்கவுண்ட் திறக்கும்போது இதுபோன்ற அனைத்து அம்சங்களையும் பரிசீலனை செய்து, நமக்கு தேவையான ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bank, Bank accounts, Savings