• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இந்தியாவின் பெட்ரோலியத் தேவையை நிறைவேற்றுவோம்: சவுதி அரேபியா

இந்தியாவின் பெட்ரோலியத் தேவையை நிறைவேற்றுவோம்: சவுதி அரேபியா

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஈரான் மீதான தடையால், இந்தியாவுக்கு எரிபொருள் கிடைப்பது பாதிக்கப்பட்டால், அதனை சரிசெய்வோம் என்று சவுதி அரேபியாவின் பெட்ரோலிய துறை அமைச்சர் காலித் அல்-ஃபாலி தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியாவின் பெட்ரோலியத் தேவையை பூர்த்தி செய்ய சவுதி அரேபியா தயாராக இருப்பதாக அந்நாட்டின் பெட்ரோலியத் துறை அமைச்சர் காலித் அல்-ஃபாலி தெரிவித்துள்ளார்.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவருவதால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக அளவில் பெட்ரோலியத் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய எரிசக்தி கூட்டமைப்பு கூட்டத்தில் சவுதி அரேபிய பெட்ரோலிய அமைச்சர் காலித் அல்-ஃபாலி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துப் பேசியபோது, இந்தியாவின் எரிசக்திக்கு தேவையை நிறைவேற்றுவோம் என்றும், இந்தியாவில் முதலீடு செய்வோம் என்றும் உறுதியளித்ததாக கூறினார்.

    ஈரான் மீதான தடையால், இந்தியாவுக்கு எரிபொருள் கிடைப்பது பாதிக்கப்பட்டால், அதனை சரிசெய்வோம் என்று அவர் உறுதியளித்தார். மேலும், பெட்ரோலிய வர்த்தகம், பெட்ரோகெமிக்கல் ஆகியவற்றில் முதலீடு செய்ய உள்ளதாகவும் காலித் அல்-ஃபாலி தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: