புதிய மைல்கற்களை எட்டியது சஞ்சீவனி பரப்புரை..

சஞ்சீவனி பரப்புரை

சஞ்சீவனி பரப்புரை தடுப்பு மருந்துகளின்மீது உள்ள தயக்கத்தை உடைத்து ஐந்து மாவட்டங்களில் உள்ள இந்தியக் கிராமப்புறங்களுக்குத் தடுப்பு மருந்து வழங்கலைக் கொண்டுசெல்வதில் ஒரு நீண்ட பயணத்தை நிகழ்த்தியுள்ளது.

 • Share this:
  தடுப்பு மருந்துகளின்மீதான தயக்கத்தில் தொடங்கித் தடுப்பு மருந்துகளின்மீதான ஆர்வம்வரை: சஞ்சீவனி பரப்புரையின் பயணம்

  ஏப்ரல் 2021ல் பஞ்சாபில் உள்ள அட்டாரி எல்லையில் சஞ்சீவனி பரப்புரை தொடங்கப்பட்டது, அன்று முதல் இன்றுவரை தடுப்பு மருந்துகளின்மீது உள்ள தயக்கத்தை உடைத்து ஐந்து மாவட்டங்களில் உள்ள இந்தியக் கிராமப்புறங்களுக்குத் தடுப்பு மருந்து வழங்கலைக் கொண்டுசெல்வதில் ஒரு நீண்ட பயணத்தை நிகழ்த்தியுள்ளது. அட்டாரியிலிருந்து தட்சிண கன்னடாவரை சஞ்சீவனி பரப்புரை கோவிட்-19க்கு எதிரான போரில் கிராமப்புறச் சமூகங்களுக்கான ஓர் இயக்கமாக ஆகியுள்ளது. 7 ஆகஸ்ட் கணக்கின்படி, சஞீவனி பரப்புரை ஐந்து மாவட்டங்களில் (அம்ரித்சர், இந்தூர், நாசிக், தட்சிண கன்னடா, குண்டூர்) 502 கிராமங்களை எட்டியுள்ளது. இதன்மூலம், இந்தப் பரப்புரை கிட்டத்தட்ட 2.5 லட்சம் குடிமக்களிடம் உள்ளூர்ப் பின்னணியுடன் தடுப்பு மருந்து வழங்கல் செய்தியைக் கொண்டுசென்றுள்ளது. 20000க்கும் மேற்பட்ட குடிமக்கள் பதிவுகள், போக்குவரத்து போன்றவற்றின் வழியாகத் தடுப்பு மருந்து வழங்கலுக்கான உதவிகளைப் பெற்றுள்ளார்கள்.

  இந்தப் பரப்புரை, பல பங்குவகிப்போர் கூட்டுப் பணி மாதிரியில் இயங்குகிறது. கோவிட்-19 நோய்ப்பரவல் மிகவும் பெரிய ஒரு நெருக்கடியாகும், இதை ஒரு பங்குவகிப்பவர்மட்டும் கையாள இயலாது. அதனால், தடுப்பு மருந்துகளை நாட்டின் கிராமப்புறப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்வதற்கு அரசு, முன்கள நலப் பணியாளர்கள், உள்ளூர்ச் சமூகத் தலைவர்கள், சமூக உறுப்பினர்கள் போன்ற அனைத்துப் பங்குவகிப்போரையும் ஒன்றாகத் திரட்டுவது முக்கியம்.

  இந்தப் பரப்புரை தடுப்பு மருந்து வழங்கலைக் கிராமப்புறச் சமூகங்களுக்குக் கொண்டுசெல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிற நேரத்தில், இந்தப் பயணத்தில் பல சவால்களும் இருந்தன. குறிப்பாக, பழங்குடியினத்தவர் வசிக்கும் பகுதிகள், தொலைதூரத்தில் உள்ள பகுதிகள் போன்றவற்றுக்குத் தடுப்பு மருந்துகளைக் கொண்டுசெல்வது, அங்கு தடுப்பு மருந்துகளின்மீது உள்ள தயக்கம் ஆகியவை மிகப் பெரிய சவால்களைக் கொண்டுவந்தன. ஒவ்வொரு வீடாகச் சென்று தகவல் தொடர்பை நிகழ்த்துவது என்னும் இந்தப் பரப்புரையின் வியூகத்தை உள்ளூர்ச் சூழல், சமூகங்களின் பண்பாட்டு அம்சங்களுக்குப் பொருந்தும்படி கூடுதலாக்கவேண்டியிருந்தது. இதற்காக, கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் போன்ற உள்ளூர்ச் சமூகத் தலைவர்களைப் பரப்புரைக் குழுவினர் ஒன்றுதிரட்டுகிறார்கள், அவர்களிடம் பரப்புரைச் செய்திகளை வழங்குகிறார்கள். சஞ்சீவனி பரப்புரையின் வெற்றிக்கு இப்படிப்பட்ட உள்ளூர்ச் சமூகம் மிக முக்கியமாகும்.

  இன்னொரு சவால், தொலைதூரத்தில் உள்ள கிராம மற்றும் பழங்குடியினச் சமூகங்கள் பொதுத் தடுப்பு மருந்து வழங்கல் மையங்களுக்கு வருவது எப்படி? இந்த இடைவெளியை நிரப்புவதற்காகச் சஞ்சீவனி பரப்புரை தீவிரமாகப் பணியாற்றியுள்ளது, மக்கள் தடுப்பு மருந்து வழங்கல் மையங்களுக்குச் சென்று வருவதற்கு வேண்டிய போக்குவரத்து உதவிகளைச் செய்துள்ளது. இதன்மூலம், சென்று சேர்வதற்கு மிகக் கடினமான, வழக்கமான நலப் பராமரிப்புச் சேவைகளுடைய வட்டத்துக்குள் பெரும்பாலும் இடம்பெறாத பகுதிகளைக்கூட இந்தப் பரப்புரை எட்டியது. சில சூழ்நிலைகளில், சஞ்சீவனி வண்டி பொது நல அலுவலர்களுடைய போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தொலைதூரத்தில் உள்ள கிராமங்கள், சமூகங்களுக்கு அவர்கள் வீட்டு வாசலில் தடுப்பு மருந்து ஊசிகள் கிடைத்தன.

  நோய்ப்பரவலின் இப்போதைய இரண்டாம் நிலை, நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் பெரிய பிரச்சனைகளைக் கொண்டுவந்துள்ளது. வரக்கூடிய மூன்றாம் அலையும் கிராமப்புறப் பகுதிகளில் தீவிரமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சஞ்சீவனி பரப்புரை ஒரு தனித்துவமான இடையீட்டை மேற்கொண்டுள்ளது, இது, கிராமப்புறப் பகுதிகளில் உள்ள பொது நல உள் கட்டமைப்பைக் கூடுதலாக்குவதில், அதன்மூலம் அவர்கள் மிகவும் செயல்திறன் மிக்க, மிகவும் பாதுகாப்பான வழியில் தடுப்பு மருந்து ஊசிகளை வழங்க உதவுவதில் கவனம் செலுத்துகிறது. அரசு நல அலுவலர்களுடைய அறிவுறுத்தலுடன், 100 தடுப்பு மருந்து வழங்கல் மையங்களில் ஒரு முழுமையான தேவைகள் மதிப்பீடு நடத்தப்பட்டது, தடுப்பு மருந்து வழங்கல் மையங்களில் வலுவான நோய்த்தொற்றுத் தடுப்புக் கட்டுப்பாட்டுக்கு முக்கியமான மருத்துவப் பொருட்களின் தேவைகள் புரிந்துகொள்ளப்பட்டன. இன்று, இந்த 100 தடுப்பு மருந்து வழங்கல் மையங்களும் வலுவான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தேவையான பொருட்களுடன் இயங்கிவருகின்றன.

  இந்த இடையீடுகளும் ஆர்வமான சமூகப் பங்களிப்பும் உள்ளூர் அரசு ஆதரவும் தடுப்பு மருந்துகளின்மீதான தயக்கத்தை உடைக்க உதவியுள்ளன. உண்மையில், இந்தத் திட்டம் செயல்பட்டுவரும் கிராமங்கள் இப்போது தங்களுடைய தடுப்பு மருந்து ஊசிகளைப் பெற ஆர்வம் காட்டுகின்றன. அனைவரும் எளிதாகத் தடுப்பு மருந்தைப் பெறுவதை உறுதிசெய்வதற்காக, இந்தப் பரப்புரை இந்த இயக்கத்தைத் தொடரும். இந்த இயக்கத்தில் சேரவேண்டிய நேரம் இது. ஏனெனில், எந்த ஓர் இடத்திலும் எவருடைய நலனும் அனைத்து இடங்களிலும் அனைவருடைய நலனும் ஆகும்.

  அனில் பர்மர், துணைத் தலைவர், கம்யூனிட்டி இன்வெஸ்ட்மென்ட் (சமூக முதலீடு),யுனைட்டெட் வே மும்பை
  Published by:Tamilmalar Natarajan
  First published: